இது என்ன இப்படி வீங்கி இருக்கு… த்ரிஷா வெளியிட்ட புகைப்படத்தால் பதறிப் போன ரசிகர்கள்…!!!

Author: Vignesh
9 November 2022, 4:15 pm

நடிகை திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். சிறிய பிரேக் இவருக்கு திரை உலகில் ஏற்பட்ட பிறகு தற்போது பொன்னியின் செல்வன் பகுதி 1 படத்திற்கு பின் மிகப் பெரிய கம்பேக்கை கொடுத்திருக்கிறார் என்று கூறலாம்.

இந்த திரைப்படத்தில் குந்தவை பிராட்டியாக இவர் நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆரம்ப காலத்தில் திரிஷா எப்படி உடலை பிட்டாக வைத்திருந்தாரோ அது போலவே இந்த படத்திலும் ஜொலிப்பதாக கூறினார்கள்.

Trisha_UpdateNEws360

மேலும் இந்த படத்தின் பிரமோஷனுக்காக இவர் சென்ற பகுதிகளில் எல்லாம் புடவையைக் கட்டி பளிச்சென்று அசத்தி வந்த இவருக்கு பல படங்கள் தொடர்ந்து வந்து குவிந்தது.

இதனை அடுத்து தமிழில் திரிஷா தி ரோடு என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும் மலையாள நடிகர் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் ராம் என்ற படத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வந்து விட்டது.

trisha krishnan - updatenews360

பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட இவர் டான்ஸ் ஏதும் ஆடாமல் இருந்து விட்டார். இதற்கு காரணம் இவரது காலில் ஏற்பட்டிருக்கும் வீக்கம் தான்.

trisha krishnan - updatenews360

இதனைத் தொடர்ந்து இவர் இத்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீங்கிய காலை புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

மேலும் இந்த வீக்கம் சரியாகி பழைய நிலையில் டான்ஸ் ஆட வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார்கள்.

மிக விரைவில் திரிஷாவின் கால் குணமாகி பழைய நிலைக்கு அவர் திரும்புவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவதற்கு மிகச் சிறப்பான நடனத்தையும் ஆடுவார் என்று அனைவரும் காத்திருக்கிறார்கள்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!