எப்பவுமே போதை..? பிரபல நடிகை திருமணத்துக்கு ‘நோ’ சொல்ல இது தான் காரணம்..! உண்மையை உடைத்த பயில்வான் பேச்சால் ரசிகர்கள் அப்செட்..!

Author: Vignesh
24 November 2022, 11:15 am

மிஸ் சென்னை பட்டத்தை வென்று தமிழ் சினிமாவில் ஜோடி படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகியவர் நடிகை திரிஷா. இதனை தொடர்ந்து மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

பின் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

Trisha_UpdateNEws360

இடையில் காதல் தோல்வி, நிச்சயம் வரை சென்று நின்று போன திருமணம் என பல சர்ச்சைகளிலும் சிக்கி மார்க்கெட்டை இழந்தார். மீண்டும் தன் இடத்தினை பிடிக்க தற்போது படங்களில் நடித்து வருகிறார் திரிஷா.

39 வயதை எட்டிய திரிஷா இன்னும் திருமணமாகாமல் தனிமையில் இருக்க நட்சத்திரங்களின் விவாகரத்து செயல்களால் தான் செய்யவில்லை என்று சமீபத்தில் கூறியிருந்தார். ஆனால் அதற்கு முக்கிய காரணமே குடிபழக்கம் தான் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

trisha updatenews360

சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையான பின் நட்சத்திரங்களுடன் இரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டு கும்மாளம் போடுவது திரிஷாவின் பழக்கமாக இருந்தது. சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியதோடு திரிஷா குடித்துவிட்டு பல பிரச்சனைகளையும் செய்திருக்கிறார் என்று பயில்வான் குறிப்பிட்டுள்ளார்.

நீலாங்கரையில் இருக்கும் அவரது வீட்டில் குடித்துவிட்டு பிரச்சனையை ஏற்படுத்தியதால் போலிஸார் சமாதானம் செய்யும் அளவிற்கு அட்டகாசம் செய்திருக்கிறார் திரிஷா.

Trisha-updatenews360-2

குடிப்பழக்கம் சகஜமாகவே திருமணம் செய்தால் இதை செய்ய தடை வரும் என்பதற்காகவே இன்னும் திருமணம் செய்யாமல் திரிஷா இருப்பதாக பயில்வான் உண்மையை கூறியுள்ளார். தற்போது குந்தவை மூலம் திரிஷா தன் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறார்.

  • Sun TV Serial வந்த வேகத்தில் ஜாக்பாட்… ஒரே சீரியலால் அத்தனை நடிகைகளையும் ஓரங்கட்டிய பிரபலம்!