அப்போவும் இப்போவும் இளமை குறையா அழகி… திரிஷா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்திருக்காங்க பாருங்க!

Author:
3 October 2024, 4:01 pm

தென்னிந்த சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராகவும் தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகையாகவும் பார்க்கப்பட்டவர் தான் நடிகை திரிஷா. இவர் 2000 காலகட்டத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை என்று பெயர் எடுத்தார்.

trisha

1999 ஆம் ஆண்டு ஜோடி திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த நடிகர் திரிஷா நடித்த மௌனம் பேசியதே, சாமி, அலை, கில்லி, ஆயுத எழுத்து, ஆறு, குருவி, பீமா ,அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா ,மங்காத்தா, மோகினி உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

கடைசியாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை அடுத்து அண்மையில் வெளிவந்த கோட் திரைப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து மற்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார் .

இதையும் படியுங்கள்: இங்கிலிஷ்…. இங்கிலிஷ்… IIFA விருது விழாவில் தமிழில் பேசிய வரலக்ஷ்மி – அசிங்கப்படுத்திய பத்திரிகையாளர்!

அடுத்ததாக அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகை திரிஷா நடித்திருக்கிறார். இப்படியாக தொடர்ந்து அடுத்தடுத்த நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகையாகவும் மார்க்கெட் தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகை திரிஷா திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னர் அதாவது மாடல் அழகியாக அவர் இருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னர் திரிஷா இப்படித்தான் இருந்தாரா அன்றும் இன்றும் என்றும் எப்போதும் இளமை மாற அழகாக இருக்கும் திரிஷாவின் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 321

    0

    0