உன்ன காலி பண்ணாம நான் கல்யாணம் பண்ணமாட்டேன் – அதுப்பில் ஆடும் அழகு நடிகை அடங்கி போகும் நயன்தாரா!

Author: Shree
19 April 2023, 11:45 am

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஒரு நடிகையாக இப்படி இருப்பது இது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார்,

அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்த பின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார். பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்.

அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. இதனிடையே நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருமே வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களையும், தொழில் ரீதியான சறுக்கல்களையும் சந்தித்து வருகிறார்கள். இதனால் கோவில் , பரிகாரம் என செய்து வருகிறார்கள். மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க இருவரும் போராடி வருகிறார்கள். நயன்தாரா கல்யாண பிசியில் இருந்த கேப்பில் உள்ளே நுழைந்த திரிஷா கோலிவுட்டில் மீண்டும் ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்து நயன்தாராவையே ஒதுக்கி வைத்துவிட்டார்.

தற்போது திரிஷா தான் மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார். நயன்தாராவுக்கு இடம் கொடுக்காத அளவுக்கு தொடர் ஹிட் படங்களில் நடித்துவிட்டு தான் திருமணம் செய்துக்கொள்வேன் என முடிவோடு இறங்கிவிட்டாராம் திரிஷா. திரிஷா தன் சாம்ராஜ்யத்தையே அழிக்கப்போகிறார் என்ற பயம் நயன்தாராவை கொஞ்சம் கொஞ்சமாக வாட்டி வதைத்து வருகிறது.

இதனைக் கொஞ்சம் அமைதியாக உஷாராக காயை நகர்த்தி ஒரு மாபெரும் ஹிட் கொடுக்க நயன்தாரா திட்டமிட்டு களத்தில் இறங்கியுள்ளாராம். ஆனால், அதற்கு விஜய் தான் தடையாக இருக்கிறார். ஆம், திரிஷா லியோ படத்தில் நடித்து விஜய் உடன் நெருக்கமாக பழகி வருவதால் அவர் தான் அடுத்தடுத்த நல்ல படவாய்ப்புகளை தேடி கொடுக்கிறாராம். பாவம் நயன்தாரா நிமிர முடியாத அளவுக்கு சறுக்கலை சந்தித்துவிட்டார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1943

    77

    45