நம்பர் ஒன் இடத்தை பிடித்து நயனுக்கு பயத்தை காட்டிய த்ரிஷா.. தக் லைப் மூலம் செய்த சம்பவம்..!
Author: Vignesh29 March 2024, 5:43 pm
நடிகை திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். சிறிய பிரேக் இவருக்கு திரை உலகில் ஏற்பட்ட பிறகு தற்போது, பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் மிகப் பெரிய கம்பேக்கை கொடுத்திருக்கிறார் என்று கூறலாம்.

இந்த திரைப்படத்தில், குந்தவை பிராட்டியாக இவர் நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆரம்ப காலத்தில் திரிஷா எப்படி உடலை பிட்டாக வைத்திருந்தாரோ அது போலவே இந்த படத்திலும் ஜொலிப்பதாக கூறினார்கள். இதனிடையே, தமிழை தாண்டி தொலுங்கிலும் இப்போது படங்களில் கமிட்டாகி வருகிறார் திரிஷா. சிரஞ்சீவி படத்தில் அவருக்கு ஜோடியாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், பொதுவாக தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே ஹீரோயின்களுக்கு நடுவிலும் போட்டி நிலவி தான் வருகிறது. குறிப்பாக, சம்பள விஷயத்தில் தான் யார் முன்னணி என்கிற பேச்சு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், நயன்தாரா தான் 10 கோடி ரூபாய் சம்பளம் பெற்று தற்போது வரை முன்னணியில் இருந்து வந்தார்.
தற்போது பிஸியாக படங்களில் நடித்து வரும் த்ரிஷாவிடம் அஜித்துடன் விடாமுயற்சி, கமலுடன் தக் லைப் போன்ற படங்கள் கைவசம் உள்ளது. இந்நிலையில், திரிஷா கமலின் தக் லைப் படத்திற்காக 12 கோடி ரூபாய் சம்பளம் பெற இருப்பதாகவும், இதன் மூலம் அவர்தான் இனி தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார். இதன் மூலம் நயன்தாராவை திரிஷா ஓரங்கட்டி டாப் ஹீரோயின் இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.