அதுக்கு அடிமையா..? வேற வேலையே இல்லையா… தொடர்ந்து விமர்சித்த பயில்வானை வெளுத்து வாங்கிய திரிஷா..!
Author: Vignesh5 January 2023, 10:17 am
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
திரிஷா திருமணம்
அப்படி இருந்த திரிஷா மார்க்கெட் இழக்க அந்த திருமணமே காரணமாக அமைந்தது. தொழிலதிபருடன் காதல் ஏற்பட்டு நிச்சயம் வரை சென்று கருத்து வேறுபாட்டால் திருமணத்தை நிறுத்தியது தான் காரணம். அதன்பின் சினிமாவிலும் திருமணத்திலும் தோல்வியை கண்டதால் 39 வயதாகியும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.
பலர் அவரிடன் எப்போது திருமணம் என்று கேட்க அவர் சில கண்டீசன்களுடன் பதிலளித்துள்ளார். அவரது ஆசை திருமணம் எப்போது என்று என்னிடம் கேட்டால் எனக்கு கூட தெரியாது. வாழ்நாள் முழுவதும் என்னுடன் சேர்ந்திருக்கக்கூடிய மனிதர் இவர் தான் என்று தோன்ற வேண்டும். திருமணம் செய்து பின் விவாகரத்து பெற எனக்கு விரும்பம் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை திரிஷா.
பயில்வான் ரங்கநாதன்
ஆனால் இதற்கு இதுதான் காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். தனியாக இருந்தால் யாருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை என்றும் சுதந்திரமாக இருக்கலாம் என்றும் நிச்சயமாக திருமணம் செய்யப்போகும் கணவர் சினிமாவைவிட்டு விலக வேண்டும் என்று கூறுவார். இதனால் சந்தேகம் வரக்கூடும் என்ற காரணத்தால் தான் திரிஷா திருமணம் செய்யவில்லையாம். மேலும் சமந்தா உள்ளிட்ட நட்சத்திரங்களில் விவாகரத்தும் ஒரு காரணம்.
மேலும் திரிஷா குடிக்கு அடிமையாகி பலமுறை சண்டைப்போட்டும் குத்தாட்டம் போட்ட வீடியோக்களும் நிகழ்ந்துள்ளது என தெரிவித்துள்ளார் பயில்வான். மேலும் திருமணத்திற்கு பிறகு மார்க்கெட் குறைந்துவிடும் என்ற காரணமும் திரிஷாவை பயமுறுத்தி வருகிறது என கூறியுள்ளார்.
இதுகுறித்து திரிஷா கூறுகையில், அவர்கள் எல்லோரும் திமிரு பிடித்தவர்கள் என்றும், தேவையில்லாமல் இரு நடிகர்களிடையே சண்டையை மூட்டிவிட்டு பார்ப்பவர்கள் எனவும், சிலரின் சர்ச்சைகளால் தான் கஷ்டப்பட்டு வருவதாகவும், அதையெல்லாம் நான் தேவையில்லாமல் கண்டுக்கொள்ள மாட்டேன் என்றும், வேற வேலையே இல்லையா. இவ்வளவு நெகட்டிவிட்டி எதுக்கு. அனாவசியமாக ஏன் பேசுறீங்க என்று பயில்வானை மறைமுகமாக திரிஷா பேசியுள்ளார்.