கீழே விழ பதறிய திரிஷா.. ஸ்டைலாக வந்த நடிகையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்..! (video)
Author: Vignesh19 April 2024, 6:52 pm
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் நடிகை திரிஷா சினிமாவில் பிஸியாக வலம் வருகின்றார். சினிமாவில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் அப்படி சென்சேஷனலாக இருக்கிறார். அதற்கு காரணம், அவர் மீது அவர் மீது எழும் விமர்சனங்கள் தான். மன்சூர் அலிகான் முதல் பிரபல கட்சித் பிரமுகர் வரை திரிஷாவை அவதூறாக பேசிய விஷயம் சமூக வலைதளங்களில் பெரிசாக வெடித்தது.
மேலும் படிக்க: கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!
இதனை தொடர்ந்து, பல்வேறு விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் தன்னுடைய படங்களின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வரும் திரிஷா. அஜித்தின் விடாமுயற்சி கமலின் Thug life போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் விஷ்வம் பரா என்ற படத்தில் நடித்துள்ளார். 68 வயது நடிகருடன் ரொமான்ஸா என்று சில விமர்சனங்களும் வந்தன.
மேலும் படிக்க: எனக்கு ஓட்டு இல்லையா?.. ஆசையோடு வந்த சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!(video)
இந்நிலையில், இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க பிரபலங்கள் பலரும் காலையிலிருந்து வந்து கொண்டிருந்தனர். அஜித், விஜய், தொடங்கி சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரை நடிகர்கள் அனைவரும் வாக்களித்த படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதை போல், நடிகை திரிஷாவும் வாக்களித்துவிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்தார். அவரது அம்மாவுடன் வந்திருந்தார் திரிஷா. அப்போது, அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற பெண் போலீசார் தடுமாறி கீழே திரிஷா ஷாக் ஆகி பதறி போனார். அப்போது எடுக்கப்பட்ட புகைட்பபடம் தான் இது.
மேலும், அங்கிருந்த ரசிகர்கள் திரிஷாவுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட அங்கிருந்த ஒரு சிலருடன் புகைப்படம் எடுத்து பின்னர் அந்த இடத்தை விட்டு திரிஷா கிளம்பினார்.
A staff at the polling booth wanted to take a photo with #Trisha. @trishtrashers immediately fulfilled her request. 👍#LokSabhaElections2024pic.twitter.com/WfNvNjVKJP
— George 🍿🎥 (@georgeviews) April 19, 2024