விஜய்யின் வலது கை நான்…. புகைப்படத்தின் மூலம் மறைமுகமாக திரிஷா பதிவு!

Author:
26 October 2024, 3:40 pm

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகராக இருந்தவர் தான் நடிகர் விஜய். தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற இடத்தில் தக்க வைத்துக்கொண்டார்.

Vijay Trisha

பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் விஜய் சினிமாவுக்கு முழுவதுமாக டாட்டா காட்டிவிட்டு சினிமா பக்கமே தலைகாட்டாமல் முழுநேர அரசியலில் இறங்கி இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை துவங்கி இருக்கும் நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன்னர் தான் கட்சி கொடிய அறிமுகம் செய்துவிட்டு தொடர்ந்து அடுத்தடுத்த கட்சி சம்பந்தப்பட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

அரசியல் பயணத்தின் அடுத்த கட்ட வேலையாக விஜய் இன்று தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முதன்முறையாக மக்கள் மத்தியில் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு மக்கள் மத்தியில் நேரடியாக அவரை பார்க்கும் ஆர்வமும் அவரது பேச்சை கேட்கும் ஆர்வமும் அதிகரித்து இருக்கிறது. இதனால் மாநாட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

trisha

விக்ரவாண்டில் நாளை காலையிலிருந்து தொண்டர்கள் வந்து குவியார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விக்கிரவாண்டில் கடுமையான வெயில் அடிப்பதால் தாராளமான குடிநீர் அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது .

நாளை 3 மணி அளவில் மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இந்த மாநாடு துவங்க இருக்கிறது மாலை 4 மணியளவில் மாநாட்டு திடல் முன்பு தங்கி இருக்கும் வீட்டில் இருந்து விஜய் தனி பாதை வழியாக மாநாட்டு மேடைக்கு அழைத்து வரப்படுகிறார்.

அப்போது கட்சி பாடலுடன் கட்சி கொடியை ஏற்றி விஜய் இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இதனால் விஜய்யின் ரசிகர்கள் விஜயின் தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கும் வேளையில் அவருக்கு பலரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள் .

Actor Vijay

விஷயம் இப்படி இருக்க நடிகை திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் விஜய்யின் தமிழக வெற்றி கழக கட்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மறைமுகமாக பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதுதான் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகிறது.

அந்த பதிவில் விஜய்யின் தமிழக வெற்றி கழக கொடியை போலவே இருக்கும் ஸ்பெயின் நாட்டு கொடியின் படத்தை பகிர்ந்திருக்கும் நடிகை திரிஷா கையில் முறுக்குடன் தேன் குழலின் பதிவிட்டு இருக்கிறார் நாளை விஜய்யின் தாவெகா கட்சியின் முதல் மாநாடு நடைபெற உள்ள நிலையில் திரிஷாவின் இந்த பதிவு மறைமுகமாக அவருக்கு ஆதரவு அளிப்பதாக நெட்டிசன் கருத்து கூறி வருகிறார்கள்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ