இதுக்கெல்லாம் இனி நான் பொறுப்பல்ல.. திரிஷா முடிவு : ரசிகர்கள் ஷாக்?
Author: Udayachandran RadhaKrishnan12 February 2025, 11:31 am
தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக உச்ச நடிககையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா. இவர் தற்போது சூர்யாவுடன் ஒரு படத்திலும், குட் பேட் அக்லி, தக் லைஃப் என கைவசம் ஏராளமான படங்கள் உள்ளது.
இதையும் படியுங்க: விடாமுயற்சியில் வரும் பிரகாஷ் யார்? ரகசியத்தை உடைத்த மகிழ் திருமேனி..!
ஒரு பக்கம் கிசுகிசு, விமர்சனம் வந்தாலும் அதையெல்லாம் காதில் வாங்கி போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து தனி கேரியரில் கவனம் செலுத்தி முரட்டு சிங்கிளாகவே வலம் வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரிஷா போட்ட பதிவு பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில், எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
அதில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு நான் பொறுப்பல்ல. கணக்கு மீட்கப்பட்டதும் தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். அவர் இன்ஸ்டாகிராம் கணக்கை 6 மில்லியின் பேர் ஃபாலோ செய்து வருவது குறிப்பிடத்தக்கது.