அவர மாதிரி ஒரு ஜென்டில்மேனை கல்யாணம் பண்ணிக்க ரெடி.. திருமணம் குறித்து பேசிய த்ரிஷா..!
Author: Vignesh6 அக்டோபர் 2023, 3:00 மணி
ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.
சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.
ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை திருமணம் செய்யவிருந்த நிலையில், திருமணம் வரை சென்றாலும், திடீரென இருவரும் பிரிவதாக தகவல் வெளிவந்து திருமணமும் நின்றுபோனது.
இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தாலும், ஏன் இவர்களுடைய திருமணம் நின்றுபோனது என பல சர்ச்சைகள் அந்த சமயத்தில் பலருடைய கேள்வியாக இருந்தது. அப்போது நடிகர் தனுஷுக்கும், நடிகை திரிஷாவிற்கு ஏற்பட்ட நெருக்கமான உறவு தான் திரிஷா – வருண் திருமணம் நின்றுபோன காரணம் என்று தகவல் கசிந்தது.
ஆனால், இதை முற்றிலுமாக திரிஷா மறுத்ததாகவும், திரிஷாவை திருமணம் செய்யவிருந்த வருண் இதனை நம்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் தான் இவர்களுடைய திருமணம் நின்றுபோனதாகவும் தகவல் வெளியாகி மீண்டும் வைரலானது.
முழு மூச்சாக சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை திரிஷா, மலையாள திரையுலகில் உள்ள பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்த தயாரிப்பாளரின் பெயர் என்ன என்பது குறித்து தெரியவில்லை.
இதனிடையே, திரிஷா திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து திரிஷா காதில் போக வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என லியோ படத்தின் போஸ்டர் டயலாக்கை பயன்படுத்தி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
DEAR “YOU KNOW WHO YOU ARE AND YOUR TEAM”,
— Trish (@trishtrashers) September 21, 2023
“KEEP CALM AND STOP RUMOURING”
CHEERS!
இந்நிலையில் திருமணம் குறித்து அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவிக்கையில், எனக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும். அவர் ஒரு ஜென்டில்மேன் நானும் அவரும் நிறைய பேசியிருக்கோம். அவர் செய்யும் பலதரப்பட்ட விஷயங்கள் எனக்கு பிடிக்கும். அவர் நல்ல கணவராகவும், நல்ல அப்பாவாகவும் இருக்கிறார். அவரைப்போல ஒருவரை தான் எந்தப் பெண்ணும் கணவனாக பெற விரும்புவார்கள் என நாசுக்காக அஜித் போல ஒரு கணவன் தனக்கு வேண்டும் என அந்த நேர்காணலில் த்ரிஷா தெரிவித்துள்ளார்.
1
0