மீண்டும் மிரர் செல்பி.. முன்னணி ஹீரோவுடன் ஸ்பெயின் பறக்கும் த்ரிஷா..!
Author: Vignesh17 July 2024, 10:59 am
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர்.

முன்னதாக, தமிழ் சினிமாவில் திரிஷா அறிமுகமாக 22 வருடங்களுக்கு மேலாக அவர் முன்னணி ஹீரோயினாக இருப்பது மிகப்பெரிய விஷயம் என அவரது ரசிகர்கள் கூறுவது உண்டு. விஜய் உடன் லியோ படத்தில் நடித்த நடிகை திரிஷா அடுத்த அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். சமீப காலமாக த்ரிஷா குறித்து பல்வேறு கிசு கிசுக்கள் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அவரை முன்னணி ஹீரோவான விஜய்யுடன் இணைத்துவரும் கிசுகிசுக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

விஜய் உடன் லியோ படத்தில் நடித்த த்ரிஷா அஜித்துடன் விடாமுயற்சி சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்து இயக்குனர் விஷ்ணுவர்தனின் ஹிந்தியில் சல்மான் கான் வைத்து The Bull என்ற படத்தில் திரிஷா நடிக்க இருக்கிறார். விரைவில் அதன் ஷூட்டிங் ஸ்பெயின் நாட்டில் தொடங்க இருக்கிறது. அதில், பங்கேற்க சல்மான் உடன் த்ரிஷாவும் செல்ல இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. திரிஷா மீண்டும் படு பிஸியாக படங்களில் நடித்தவரும் நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. தற்போது, த்ரிஷா ஒரு மிரர் செல்ஃபியை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.