நயன்தாராவை தொடர்ந்து பாலிவுட்டில் Entry ஆகும் திரிஷா – ஹீரோ யார் தெரியுமா?

Author: Rajesh
30 December 2023, 4:10 pm

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

trisha - updatenews360 1

தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர். ஆனால் திரிஷாவோ சிம்பு மற்றும் ராணாவை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்.

இதனிடையே வீட்டில் பார்த்த மாப்பிள்ளை வருண் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று பின்னர் நின்றுபோனது. இதனால் திருமண வாழ்க்கையே இப்போதைக்கு வேண்டாம் என ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

பல வருடங்களுக்கு பின்னர் 96 திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதைடுத்து வாய்ப்புகள் குவியத்துவங்க தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கடைசியாக விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்து லிப்லாக் காட்சிகளில் நடித்து அவருடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

salman khan

தற்போதைய டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கும் திரிஷா நயன்தாராவுக்கே பெரும் போட்டியாக இருந்து வருகிறார். ஆம், நயன்தாரா பாணியில் திரிஷாவும் அடுத்ததாக பாலிவுட் திரைப்படங்களில் கமிட்டாக உள்ளார். ஹீரோ யார் தெரியுமா? பாலிவுட்டின் நட்சத்திர நடிகரான சல்மான் கான் தானாம். அறிமுக படமே சல்மான் கான் உடன் என்பதால் இவரும் நயன்தாரா ரேஞ்சுக்கு பாலிவுட்டில் பேசப்படுவார். விஷ்ணுவர்த்தன் இயக்கவுள்ள இப்படத்தை கரன் ஜோக்கர் தயாரிக்க உள்ளார். ஏற்கனவே பாலிவுட்டில் திரிஷா நடித்திருந்தாலும் தற்போது மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 442

    0

    0