நல்ல வேள நாம தப்பிச்சோம்…ரசிகர் சொன்ன ‘அந்த’ வார்த்தை..திரிஷா கொடுத்த ரியாக்சன்..!

Author: Selvan
7 February 2025, 6:06 pm

விடாமுயற்சி படம் பார்க்க போன த்ரிஷாவுக்கு ரசிகர் அளித்த சர்ப்ரைஸ்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது,தமிழ்நாட்டில் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க அதிகாலை முதலே படையெடுத்து வந்தனர்,படம் பார்த்து வந்த பலரும் கலவையான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்க: நடிகர் சோனு சூட்டை கைது செய்…காவல் நிலையத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பல திரைப்பிரபலங்களும் மக்களோடு மக்களாக சேர்ந்து விடாமுயற்சியை உற்சாகமாக கண்டுகளித்தனர்.வெங்கட் பிரபு,ஐஸ்வர்யா ராஜேஷ்,அருண் விஜய் உட்பட பல நட்சத்திரங்கள் படம் அருமையாக உள்ளது என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.

Vidaa Muyarchi audience reactions

இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் படத்தை பார்க்க திரிஷா சென்றார்,அப்போது படம் முடிந்து கிளம்பும் போது ரசிகர் ஒருவர் “திரிஷா மேம் ஆக்டிங் சூப்பர்” என கத்துவார்,உடனே திரிஷா திரும்பி பார்த்து ‘நல்ல வேள சூப்பர்னு சொன்னான்’ என தன்னுடன் வந்த நபரிடம் கூறுவார்,இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி பேசு பொருளாக மாறியுள்ளது.

விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகை திரிஷா நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார்,அஜித்திற்கு துரோகம் செய்யும் மனைவியாக நடித்துள்ளதால் ரசிகர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற ஒரு வித பயத்தோடு இருந்திருப்பார், அதனால் ரசிகரின் அந்த வார்த்தைக்கு திரிஷா நல்ல வேள சூப்பர்னு சொன்னான் என்று கூறியிருப்பார்,என நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • கொடியால் விழுந்த அடி..அஜித்-விஜய் ரசிகர்கள் மோதல்..நெல்லை தியேட்டரில் பரபரப்பு.!
  • Leave a Reply