90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர். ஆனால் திரிஷாவோ சிம்பு மற்றும் ராணாவை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்.
இதனிடையே வீட்டில் பார்த்த மாப்பிள்ளை வருண் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று பின்னர் நின்றுபோனது. இதனால் திருமண வாழ்க்கையே இப்போதைக்கு வேண்டாம் என ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.
பல வருடங்களுக்கு பின்னர் 96 திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதைடுத்து வாய்ப்புகள் குவியத்துவங்க தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கடைசியாக விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக தற்போது நடிகர் அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் 40 வயதான போதிலும் திரிஷா இன்னும் திருமணமே செய்யாமல் இருந்து வருகிறார். ஏன்? என்ன காரணம் என அவரின் நட்பு வட்டாரங்கள் கேட்டதற்கு, தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக நான் தான் இருக்கவேண்டும். லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருக்கும் நடிகையின் சிம்மாசனத்தில் நான் உட்காராமல் கல்யாணமே பண்ணமாட்டேன்.
எனக்கு 50 வயசு ஆனாலும் பரவயில்லை. நான் நினைத்ததை சாதிக்காமல் நோ மேரேஜ் என அடித்து கூறுகிறாராம். தற்ப்போது திரிஷா நயன்தாராவை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்,கட்டிவிட்டு விஜய் , அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.