விமர்சனங்களை சுமக்காதீர்கள் : பாடகிக்கு திரிஷா பதிலடியா? வைரலாகும் பதிவு!

Author: Sudha
4 July 2024, 3:23 pm

தமிழ் திரையுலகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருபவர் பாடகி சுசித்ரா.

அவர் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்றில் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை சொல்லியிருந்தார்.

அவர் சொன்னதாவது,விஜயுடன் சங்கீதா மீண்டும் ஒன்று சேர வேண்டும். ஒரு சின்ன சண்டையால் பிரிந்த குடும்பத்தை அவர்கள் ஈகோவினால் சேர்த்து வைக்காமல் இருப்பதால் தான் திரிஷா மாதிரியான ஒட்டுண்ணிகள் நுழைகிறார்கள்.

லிஃப்ட் இல் திரிஷா ரகசியமாய் எடுத்த புகைப்படத்தை போஸ்ட் செய்ததில் இருந்தே, அவர் விஜயை வைத்து சொந்தம் கொண்டாடுகிறார் என்பது தெரிகிறது.

எம் ஜி ஆருடன் ஜெயலலிதா ஒட்டிக்கொண்டது போல விஜயுடன் இப்போது ஒட்டிக்கொண்டு இருக்கிறார் இவர் ஒட்டுண்ணி போல என தெரிவித்தார்.இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

இந்நிலையில் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து டுவீட் செய்த த்ரிஷா மற்றவர்களின் விமர்சனங்களை சுமக்காதீர்கள்.உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளாதீர்கள் என பதிவிட்டிருந்தார்.இது பாடகி சுசித்ரா வின் கருத்துக்கு த்ரிஷா கொடுத்த பதிலடியா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.இந்த டுவீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ