இளையராஜாவை வச்சி ஒன்னும் பண்ணமுடியல… அழுது புலம்பும் இயக்குனர் – அடம் பிடிக்கும் தனுஷ்!

Author:
12 November 2024, 10:41 pm

நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார். அதறகான வேலைகள் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது தனுஷின் நீண்ட நாள் ஆசை கனவாக இருந்து வருகிறது.

dhanush

இந்த நிலையில் இளையராஜாவின் பயோ பிக் திரைப்படம் சமீபத்தில் டிராப் ஆகிவிட்டதாக கூறப்பட்டது ஆனால் தனுசுக்கு இந்த திரைப்படத்தை .கைவிடுவதற்கு மனசு இல்லையாம் இதற்காக அவர் சரியான தயாரிப்பு நிறுவனத்தை தேடி வருவதாக கூறப்படுகிறது .

இதனிடையே என்னை வைத்து படம் எடுக்கும் நீங்கள் அடுத்த ஒரு வருடம் என்கூடவே தான் இருக்க வேண்டும். நான் எப்போதெல்லாம் அழைக்கிறானோ அப்போதெல்லாம் வர வேண்டும் எனக்கு என்னென்ன நினைவிற்கு வருகிறதோ அந்த விஷயங்களை எல்லாம் நான் அப்பப்போ உங்களுக்கு சொல்கிறேன் அதை நோட் பண்ணிக்கோங்க என்று இளையராஜா இயக்குனர் அருண் மாதேஸ்வரனிடம் கூறி இருக்கிறார்.

ilayaraja biopic

இதனால் அடுத்த ஒரு வருடம் இளையராஜாவின் பின்னாலே குட்டி போட்ட பூனை போல அருள் மாதேஸ்வரன் சுற்றித் திரிய வேண்டுமா? என்று யோசனையில் படத்தை எடுக்கலாமா இல்லை கைவிட்டு விடலாமா என்ற ஒரு யோசனையில் இருக்கிறாராம்.

இளையராஜாவை வைத்து படமே எடுக்க முடியவில்லை என அவர் தான் எடுத்த முடிவு தவறாகி விட்டதே என புலம்புகிறாராம். அது மட்டும் இல்லாமல் இளையராஜாவுக்கு எப்போ கோபம் வரும் என்று யாருக்குமே தெரியாது. இதனால் படத்தை எடுக்கலாமா வேண்டாமா என்ற ஒரு முடிவில் அருண் மாதேஸ்வரன் இருக்கிறாராம்.

ilayaraja biopic

இளையராஜா தன்னை பற்றிய விஷயம் சொல்லும்போதே பல நிகழ்வுகள் அவருக்கு ஞாபகம் வருவது இல்லையாம். அதனால் ஞாபகத்திற்கு வரும் போதெல்லாம் உன்னை அழைக்கிறேன். நீ அப்பப்போ வந்து எழுதி கொண்டு செல் என்று சொல்கிறாராம் .

இதனால் அருள் மாதேஸ்வரன் படத்தை எடுப்பதா? இல்லை சினிமா துறையே விட்டு விட்டு ஓடி விடுலாமா? என குழப்பத்தில் இருக்கிறாராம். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டாராம். ஆனால் தனுஷ் இந்த படத்தை விடவே கூடாது எப்படியாவது எடுத்தாக வேண்டும் என அடம் பிடித்துக் கொண்டிருக்கிறாராம்.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ
  • Close menu