TRP ‘காக பிரதீப் பலி ஆடு ஆகிவிட்டார்… கமல் ஹாசனை எதிர்த்த சினேகன்!

Author: Shree
6 November 2023, 6:08 pm

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரதீப் ஆண்டனி மக்களிடையே நன்கு பரீட்சியமாகிவிட்டார். இவர் ‘அருவி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். அந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

அப்படத்தை தொடர்ந்து ‘வாழ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வேறு எந்த ஒரு படத்திலும் பார்க்க முடியவில்லை. இதனிடையே பிரதீப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே மக்களிடத்தில் நல்ல அபிப்ராயத்தை பெற்ற பிரதீப் எதிர்பாராத விதமாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். ரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதால், கோபமடைந்த அவரது ரசிகர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், தொகுப்பாளர் கமல் ஹாசன் மற்றும் இணை போட்டியாளர்களைக் கண்டித்து சமூக ஊடகங்களில் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டது குறித்து பலர் தங்களது ஆதங்கத்தையும் வருத்தத்தையும் கூறி வருகின்றனர். அந்தவகையில் பிரபல பாடலாசிரியர் சினேகன் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் இந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பார்த்ததில்லை. எனவே யார் மீது குற்றம் என்பதை திட்டவட்டமாக கூறவே முடியாது. பிரதீப் விளையாடி இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன்.

அவர், யார் திட்டினாலும், அதை எதார்த்தமாக கடந்து போகக்கூடிய மனிதர். ஆனால், அனைவரும் சேர்த்து அவரை தனித்து ஒதுக்கியதைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். பாதிக்கப்பட்டவனின் பக்கத்தில் இருப்பது தான் அறம். ஏனென்றால் தூக்கு தண்டனை கைதிக்கு கூட கடைசி ஆசை என்ன என்று கேட்கப்படுகிறது. ஆனால், பிரதீபிடம் அதுகூட கேட்காமல் வெளியேற்றப்பட்டது வருத்தமளிக்கிறது என்று சினேகன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?