சினிமாவில் இருந்து துரத்தி விடப்பட்ட அசின்.. வாய்ப்பு கொடுத்து சிக்கிய விஜய்..!

Author: Vignesh
20 December 2023, 12:15 pm

20 ஆண்டுகளுக்கு முன், தனது திரைபயணத்தை தொடங்கியவர் அசின். இவர் முதன் முதலில் மலையாளத்தில் நடித்தார், அதிலும் இவர் நடித்த கதாபாத்திரம் துணைக் கதாப்பாத்திரம் தான். பிறகு தெலுங்கில், ரவி தேஜாவுடன் இணையான கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படி மலையாளம், தெலுங்கு என நடித்து வந்தவர், உள்ளம் கேட்குமே என்கிற படத்தின் மூலம், தமிழிலும் நடிக்க தொடங்கினார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படம் சற்று தாமதிக்க, அதற்குள் எம் குமரன் சன் ஆப் மகாலக்‌ஷ்மி இவருக்கு முதல் படமாக அமைந்தது. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பிறகு சூர்யாவுடன் கஜினி, விஜயுடன் போக்கிரி, அஜித்துடன் வரலாறு, கமலுடன் தசாவதாரம் என அசின் நடித்த அத்தனை படங்களும் அவருக்கு ஹிட்.

அதன் பிறகு ஹிந்தியில் ஒரு ரவுண்ட் வந்தார். பிறகு 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அசின் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதாவது விஷயம் என்னவென்றால், தமிழில் அடுத்தடுத்து நடித்து வந்த அசின் பாலிவுட்டில் சல்மான்கான் நடிப்பில் வெளிவந்த ரெடி படத்தில் கமிட் ஆகி நடித்து வந்தார். அப்போது, ஒரு காட்சிக்காக இலங்கைக்கு சூட்டிங் சென்றது பட குழு. அந்த சமயத்தில், இலங்கை போர் தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்ததி இருந்தது. இதனால், இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும் வரக்கூடாது என்ற பெரிய அரசியல் நடந்துள்ளது.

ஆனால், பாலிவுட் வாய்ப்புகளை நம்பி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அசின். அதையும் மீறி இலங்கைக்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அசினுக்கு இனிமேல் தமிழில் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று சில அரசியல் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தது. அதனையடுத்து, பாலிவுட்டில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த அசின், தமிழிலுக்கு திரும்பி விடலாம் என்று முயற்சித்தும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்துள்ளது. அதன் பின்னர் நடிகர் விஜய்யின் காவலன் படத்தில் நடித்த போது பல சிக்கல்கள் ஏற்பட்டது. இதை புரிந்து கொண்ட அசின் சினிமாவில் இருந்து விலகி தொழிலதிபரை மணந்தது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 575

    0

    0