நான் ரொம்ப அழகா இருக்கேன்ல: வடிவேலு காமெடியை நியாபகப்படுத்திய டிரம்ப்: கலாய்த்த நெட்டிசன்ஸ்…!!

Author: Sudha
18 August 2024, 12:04 pm

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவர் மீதான சர்ச்சைகள் ஏராளமாய் அவ்வப்போது எழும்.

அவரை எதிர்த்து, இந்த தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்க உள்ளார். ‘அவரை எளிதில் வெற்றி கொள்வேன்’ என சொல்லிக்கொள்ளும் டிரம்ப், கமலா ஹாரிசை ஏகத்துக்கும் விமர்சனம் செய்கிறார். ‘இவ்வளவு காலம் இந்தியர் என்று கூறி வந்தவர், இப்போது கருப்பர் என தன்னை அடையாளப் படுத்துகிறார்’என்றும் கமலா ஹாரிஸ் பற்றி டிரம்ப் கூறியுள்ளார்.

இந்நிலையில், பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், கமலா ஹாரிசின் தோற்றத்தையும், புத்திசாலித்தனத்தையும் கடுமையாக சாடியுள்ளார். நான் அவரை விட அழகாக இருக்கிறேன். நான் கமலாவை விட நல்ல லுக்காக இருக்கிறேன்.

மேலும் எனக்கு இருக்கும் அழகுக்கும், அறிவுக்கும் இவரை எதிர்த்து போட்டியிட வேண்டியிருக்கிறது.
தேர்தல் பிரசாரத்தின் போது, தனிப்பட்ட முறையில், விமர்சனம் செய்து வரும் டிரம்ப்பை, கமலா ஹாரிஸ் வெல்வாரா? எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1531

    0

    0