வடிவேலுடன் சேர்த்து வச்சு பேசுறாங்க… மர்மத்தை உடைத்த நடிகை சோபனா குடும்பம்..!
Author: Selvan29 January 2025, 3:53 pm
பொய்யான வதந்திகளால் வாழ்க்கையை தொலைத்த ஷோபனா..!
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக வலம் வந்த ஷோபனா திடீரென மரணம் அடைந்தார்.இவருடைய மரணத்தை பலரும் பல விதமாக விவாதித்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ஷோபனாவின் அக்கா சமீபத்தில் ஒரு தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.அதில் என்னுடைய தங்கையின் உண்மை நிலை தெரியாமல் பலர் பொய்யான கருத்துக்களை பரப்பி வருவது எனக்கு வேதனை அளிக்கிறது என கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: எனக்கு இன்னொரு பெயர் இருக்கு…தெறிக்க விடும் அரசியல் களம்…மிரட்டிய ரவி மோகனின் டைட்டில் டீசர்..!
மேலும் அவள் ஒரு முருகர் பக்தர்,எப்போதும் விரதம் விரதம்னு இருப்பாங்க,சரியாக சாப்பிடாத காரணத்தினால் அவுங்களுக்கு வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டு,குடல் எல்லாம் ரொம்ப சுருங்கி உடம்பு சரியில்லாம போய் விட்டது என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஷோபனா வடிவேல் சாருடன் நடிக்கும் போது,விவேக் கூடவும் நடிச்சுட்டு வந்தாங்க,ஆனால் ஒரு கட்டத்தில் ஷோபனா வடிவேலுவோட ஆளுன்னு முத்திரை குத்தி ஒதுக்க ஆரம்பிச்சுட்டாங்க,அதனால் பெருசா பட வாய்ப்புகளும் அவுங்களுக்கு கிடைக்கல,அவுங்க கல்யாணம் பண்ணாமல் போனதுக்கு இதுதான் காரணம்,ரொம்ப உடம்பு சரியில்லாம இருந்த போது கூட வடிவேலு சார் கூட சேர்த்து வச்சு பேசிட்டு இருந்தாங்க ,அது எல்லாம் கேட்கும் போது எங்கள் குடும்பம் ரொம்ப வேதனை அடைந்தாங்க,என்னுடைய தங்கை இறந்த பிறகும் அவளை பற்றி தவறான கருத்துக்களை பலர் பரப்பி வந்தனர்,என்னுடைய தங்கை உடல்நிலை சரியில்லாமல் தான் இறந்தார் என்று அந்த பேட்டியில் மிகுந்த மன வருத்தத்துடன் பகிர்ந்திருப்பார்.