விஜய் – சங்கீதா விவாகரத்து கட்டுக்கதை கட்டிய டுபாக்கூர்கள்..! முற்றுப்புள்ளி வைக்க இந்த விசயம் நடக்கனும்..! ரசிகர்கள் வேண்டுகோள்..!

விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் வாரிசு. பீஸ்ட் பட படப்பிடிப்பின் போதே இப்படத்திற்கான அறிவிப்பு வந்துவிட்டது, படம் முழுவதும் தயாராகி வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.

அண்மையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. விஜய்யின் எந்த பட நிகழ்ச்சி என்றாலும் அவரது மனைவி சங்கீதா கலந்துகொள்வார். பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சி என்றாலும் கலந்துகொள்வார். ஆனால் அட்லீ-ப்ரியாவின் சீமந்தம், வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கு சங்கீதா அவர்கள் வரவில்லை.

இதனால் பல செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. அவர் வராததற்கு முக்கிய காரணம் அவர்களின் மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களுடன் சங்கீதா அங்கு இருப்பதால் நிகழ்ச்சிகளுக்கு வர முடியவில்லை என கூறப்படுகிறது.

ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு, பிரிந்து வாழ்வதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால் உண்மையில் விஜய் மனைவி சங்கீதா லண்டன் சென்றுள்ளதாகவும், இந்த வருட வெக்கேஷனை தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் கொண்டாட இருப்பதாகவும், இதற்காக தான் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய்யும், சென்னையில் உள்ள பணிகளை முடித்து கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க, லண்டன் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே இப்படி ஒரு தவறான தகவல் பரவப்பட்டு வரும் நிலையில், அனைவரையுமே அதிர்ச்சி அடைய செய்யும் விதமாக, விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தில், விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், இருவரும் மியூச்சுவல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக போடப்பட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் யாரோ சிலர் கீர்த்தி சுரேஷ் தான் விஜய்யின் பார்ட்னர் என்றும், விஜய்க்கு மூன்று குழந்தைகள் இருப்பது போன்றும்… அத்துமீறி விக்கிபீடியா பேஜில் மாற்றம் செய்துள்ளது ரசிகர்களிடையே, கோவத்தை ஏற்படுத்தி உள்ளது.

விக்கிபீடியாவில் இடம்பெறும் தகவல்கள் அனைவராலும் மாற்றக்கூடியவை எனவே இதனைப் பயன்படுத்தி வேண்டும் என்றே சிலர், இவ்வாறான பொய்யான தகவலை மாற்றி பதிவிட்டுள்ளனர். கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு கூட, சில அரசியல் தலைவர்களின் பெயர்களை தவறாக விக்கிபீடியாவில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

நெகட்டிவ் விமர்சனங்கள் வரத்தான் செய்யும் ஆனால் அதை கண்டுக்காமல் நாம் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என விஜய் சொன்ன வசனத்தை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே, விஜய் – சங்கீதா விவாகரத்து ஒரு வதந்தி செய்திதான் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். மேலும், சங்கீதா சில மாதங்களுக்கு முன்பே லண்டனில் தன் அப்பாவின் வீட்டிற்கு வெகேஷன் சென்றுள்ளதால் தான் பல நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ளாமல் போனதாகவும், விஜய்யின் வாரிசு ஆடியோ லான்ச் நிகழ்ச்சி முடிந்து கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மாமனார் வீட்டில் பங்கேற்க லண்டன் சென்றுவிட்டதாக நம்பக தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது.

இந்நிலையில், விஜய் – சங்கீதா விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு விசயம் நடந்தால் மட்டுமே அதையெல்லாம் நிறுத்த முடியும் என்றும், விஜய் தன் குடும்பத்துடன் ஒன்றாக இணைந்து புகைப்படம் வெளியிட வேண்டும் எனவும், இல்லையென்றால் குடும்பத்து விமான நிலையத்திலோ அல்லது வீட்டிற்கு போகும் வழியிலோ எடுத்த புகைப்படம் வெளியாகி இருந்தால் இதற்கு முற்றுப்புள்ளி கிடைத்திருக்கும் என்பது விஜய் ரசிகர்களின் எதிர்பார்பாக உள்ளது.

தற்போது சங்கீதா சென்னைக்கு வந்தால் விஜய்யுடன் இணைந்து சென்றால் கூட இதற்கான தீர்வு கிடைக்கும் எனவும், 24 வருட திருமண வாழ்க்கையில் இப்படியொரு கதையை யாரும் கேட்டதில்லை என்று ரசிகர்கள் பொங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

5 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

5 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

6 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

7 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

7 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

7 hours ago

This website uses cookies.