நிஜ வாழ்க்கையில் எம்.ஆர்.ராதா இப்படிப்பட்டவரா?.. திரைக்குப்பின்னால் பல பெண்களுடன் ஏற்பட்ட நெருக்கம்..!

Author: Vignesh
19 May 2023, 11:30 am

எம்.ஆர்.ராதாவின் தந்தை ராஜகோபாலன் ரஷ்யா நாட்டில் ராணுவவீரராகப் பணிபுரிந்து வந்தபோது உருசிய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் வீர மரணமடைந்தார்.

எம்.ஆர்.ராதா சிறுவயதில் தந்தையை இழந்து பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்று சுற்றித்திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ஃபோர்டர் (பாரம் சுமக்கும் பணியாளர்) ஆக வேலை செய்து வந்தாராம்.

m r radha-updatenews360

அப்போது ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியின் உரிமையாளர் ரங்கநாதன் எம்.ஆர்.ராதாவை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் பார்த்த போது, இவர் மூன்று கனமான சூட்கேஸை ஒரே நேரத்தில் தூக்கி கொண்டு செல்லும் அழகை கண்டு தனது நாடக கம்பெனியில் இணையும்படி ராதாவிடம் தெரிவித்துள்ளார். பின்பு அந்த நாடக கம்பெனியில் இணைந்து பின்னர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட பல கம்பெனிகளில் பணியாற்றினார்.

m r radha-updatenews360

இராதாவிற்கு சரஸ்வதி, தனலெட்சுமி, பிரேமாவதி, ஜெயமால், பேபி அம்மால் ஆகிய மனைவிகளுக்கு பிறகு இலங்கைக்கு சென்று கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டாா், இவர்களுக்கு பிறந்தவர் தான் நடிகை ராதிகா ஆவார். இராதாவிற்கு தமிழரசன், எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, ராணி என்ற ரஷ்யா, செல்வராணி, ரதிகலா, செல்வராணி, ராதிகா, நிரோஷா, மோகன் ராதா என்னும் பிள்ளைகள் பிறந்தனர். இவர்களுள் எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, ராதிகா, நிரோஷா ஆகியோர் திரைப்படத்துறையில் நடித்துள்ளனர். மோகன் ராதா தயாரிப்பாளாராக உள்ளார்.

m r radha-updatenews360

எம்.ஆர்.ராதா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவரும் படங்களில் வாழ்க்கை தத்துவங்கள் அதிகமாக இருக்கும். மேலும், கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என எம்.ஆர்.ராதா நடிக்காத கதாபாத்திரமே கிடையாது. எம்.ஆர்.ராதா வித்தியாசமான நடிப்பில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை இன்றளவும் உருவாக்கி உள்ளார்.

m r radha-updatenews360

இதனிடையே, எம்.ஆர்.ராதா நடிப்பில் வெளிவந்த படங்களில் முக்கியமான படம் ஒன்று “ரத்தக்கண்ணீர்” தற்போது வரை இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், சினிமா வாழ்க்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் எம்.ஆர். ராதா பல பெண்களுடன் உறவு வைத்து இருந்ததாகவும், எம்.ஆர்.ராதா சம்பாரித்த அத்தனை பணத்தையும் அவர்களுக்கே கொடுத்துவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி