கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான தெலுங்கில் Ye Maaya Chesave மற்றும் தமிழில் விண்ணைதாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா.
இதற்கு முன்னர், கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் மற்றும் சில முக்கிய விளம்பரங்களிலும் நடித்து வந்தார். 2010ம் ஆண்டு, அதர்வா ஜோடியாக பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்த இவர், இதன் பின்னர், நிறைய தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதன் மூலம், அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று, தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றார். கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.
முன்னதாக நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, கணவரை கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுடைய விவாகரத்து காரணம் என்ன என்பது குறித்து பல வதந்திகள் வெளிவந்தது.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர், மையோசிட்டிஸ் என்ற நோயால் அவதிப்பட்டு தற்போது அதற்கு சிகிச்சை மேற்கொண்டு உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரபல திரைப்பட விமர்சகரும், சென்சார் நிபுணருமான உமர் சந்து சமந்தாவின் விவாகரத்து குறித்து ஷாக்கிங் ட்விட் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஷாக் ஆக உள்ளது.
இப்பதிவில் சமந்தா கூறியிருப்பது போல் உமர் சந்து பதிவு செய்துள்ளார். இதில் ‘நாகசைத்தாயா ஒரு மோசமான கணவர் என்றும், தன்னை அவர் மனதளவிலும், உடலளவிலும் துன்புறுத்தியதாகவும், தான் கர்ப்பமாக இருந்த நிலையில், கருக்கலைப்பு செய்துவிட்டேன் எனவும், கடவுளுக்கு நன்றி, விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டேன்’ என்று குறிப்பிட்டு உமர் சந்து பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.