மஞ்சள் வீரனுக்கு போடப்பட்ட மாவுக்கட்டு.. பயங்கர விபத்தில் சிக்கிய TTF வாசன்..! (வீடியோ)

Author: Vignesh
18 September 2023, 10:46 am

Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து, அதனை வீடியோவாக பதிவிட்டு 2″கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.

manjal veeran ttf -updatenews360

சமூக வலைதளங்களில் பிரபலமான டிடிஎஃப் வாசன் போக்குவரத்து விதிகளை மீறியதால் புகாரியில் சிக்கி பிரபலமானது தான் அதிகம் என்று சொல்லலாம். அந்த வகையில், சமீபத்தில் இயக்குனர் செல்அம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

manjal veeran ttf -updatenews360

அதற்கான போஸ்டரும் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வைரலானது. பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் டாக்டர் கவிதா பிரியதர்ஷினி தயாரிப்பில் உருவாகும் மஞ்சள் வீரன் படத்திற்காக TTF வாசன் சுமார் 1.8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வைரலானது.

manjal veeran ttf -updatenews360

இதனிடையே, படம் ஆரம்பித்து சில நாட்களில் TTF வாசனின் கார் பைக்கில் சென்ற ஒரு நபரின் மீது மோதி சர்ச்சையாகி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

manjal veeran ttf -updatenews360

இந்நிலையில், TTF தன்னுடைய பைக்கில் வேகமாக சென்று வீலிங் அடிக்க முயன்றுள்ளார். அப்போது, நிலைதடுமாறி பயங்கர விபத்தில் சிக்கினார். இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 453

    0

    0