“இது நியாயமே இல்ல” என் வாழ்க்கையே அழிச்சிட்டாங்க – TTF வாசன் பேட்டி!

Author: Shree
3 நவம்பர் 2023, 7:39 மணி
ttf vasan
Quick Share

Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து, அதனை வீடியோவாக பதிவிட்டு 2″கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பிரபலமான டிடிஎஃப் வாசன் போக்குவரத்து விதிகளை மீறியதால் புகாரியில் சிக்கி பிரபலமானது தான் அதிகம் என்று சொல்லலாம். அந்த வகையில், சமீபத்தில் இயக்குனர் செல்லம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

அதற்கான போஸ்டரும் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வைரலானது. பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் டாக்டர் கவிதா பிரியதர்ஷினி தயாரிப்பில் உருவாகும் மஞ்சள் வீரன் படத்திற்காக TTF வாசன் சுமார் 1.8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

இதனிடையே, படம் ஆரம்பித்து சில நாட்களில் TTF வாசனின் கார் பைக்கில் சென்ற ஒரு நபரின் மீது மோதி சர்ச்சையாகி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், TTF தன்னுடைய பைக்கில் வேகமாக சென்று வீலிங் அடிக்க முயன்றுள்ளார். அப்போது, நிலைதடுமாறி பயங்கர விபத்தில் சிக்கினார். வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இருபது லட்ச ரூபாய் பைக்கை ஓட்ட 3 லட்சம் ரூபாய்க்கு பாதுகாப்பு உடை மற்றும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர்த்தப்பினார் டிடிஎஃப் வாசன். ஆபத்தை விளைவிக்கும் வகையில், வண்டி ஓட்டியதாக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுவரை இரண்டு முறை ஜாமீன் கேட்டும் டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

மூன்றாவது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஜாமீனுக்கு மனு அளித்து இருந்தார். இந்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில் புழல் சிலையில் இருந்து வெளியில் வந்துள்ள TTF வாசன் இது குறித்து பேட்டியளித்துள்ளார்.

” என்னுடைய வாழ்க்கையே பைக்தான். நான் என்னுடைய பேஷனைத்தான் தொழிலாகவே மாற்றி இருக்கிறேன். அதற்காகவே என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து இருக்கிறேன். அப்படி இருக்கும் போது இந்த விஷயத்திற்காக எனக்கு 10 வருடம் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்திருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நீதிமன்றம் கொடுத்துள்ள இந்த தீர்ப்பு “என்னை திருத்த வேண்டும் என்று செய்தது போல் இல்லை. என்னுடைய வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்று செய்தது போல் இருக்கிறது என அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 332

    0

    0