இளம் நடிகையுடன் உல்லாச பயணம்…ஹெல்மெட் போடாமல் சென்ற TTF வாசன்..!

Author: Selvan
25 December 2024, 7:49 pm

இன்ஸ்டாவில் வைரலாகும் TTF வாசன் வீடியோ

TTF வாசன் இன்ஸ்டாகிராம்,யூடியூப்பில் பைக் ரேஸ் வீடியோ போட்டு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.இவர் மீது அடிக்கடி புகார்கள் வந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்தடுத்து விடீயோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார்.

TTF Vasan Bike Stunt Videos

இந்நிலையில் சினிமாவில் நடிக்க சமீபத்தில் களம் இறங்கினார்.அந்த வகையில் மஞ்சள் வீரன் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகி,பின்பு இயக்குனருக்கும் அவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அந்த படத்திலிருந்து விலகினார்.தற்போது மீண்டும் ஐபில் என்ற ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார்.

இப்பட ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் பின்னாடி ஒரு இளம் நடிகையை உக்கார வச்சு கூப்பிட்டு செல்வார்.

இதையும் படியுங்க: சினிமாவுக்காக 19 வயதில் ராஷ்மிகா பண்ண காரியத்தை பாருங்க..வைரலாகும் வீடியோ..!

அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை 22 வயதான குஷிதா கல்லாபுவு இவர் தெலுங்கில் 5 படங்களில் நடித்து முடித்துள்ளார்.தற்போது தமிழ் சினிமா பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார்.அந்த வகையில் ஐபில் படத்தில் TTF வாசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது இந்த விடீயோவை பார்த்த ரசிகர்கள்,அண்ணே ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்க,இல்லைனா போலீஸ் வந்து பிடிச்சுட்டு போயிருவாங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!