Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து, அதனை வீடியோவாக பதிவிட்டு 2″கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பிரபலமான டிடிஎஃப் வாசன் போக்குவரத்து விதிகளை மீறியதால் புகாரியில் சிக்கி பிரபலமானது தான் அதிகம் என்று சொல்லலாம். அந்த வகையில், சமீபத்தில் இயக்குனர் செல்லம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
அதற்கான போஸ்டரும் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வைரலானது. பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் டாக்டர் கவிதா பிரியதர்ஷினி தயாரிப்பில் உருவாகும் மஞ்சள் வீரன் படத்திற்காக TTF வாசன் சுமார் 1.8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
இதனிடையே, படம் ஆரம்பித்து சில நாட்களில் TTF வாசனின் கார் பைக்கில் சென்ற ஒரு நபரின் மீது மோதி சர்ச்சையாகி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், TTF தன்னுடைய பைக்கில் வேகமாக சென்று வீலிங் அடிக்க முயன்றுள்ளார். அப்போது, நிலைதடுமாறி பயங்கர விபத்தில் சிக்கினார். வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இருபது லட்ச ரூபாய் பைக்கை ஓட்ட 3 லட்சம் ரூபாய்க்கு பாதுகாப்பு உடை மற்றும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர்த்தப்பினார் டிடிஎஃப் வாசன். ஆபத்தை விளைவிக்கும் வகையில், வண்டி ஓட்டியதாக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
சமீபத்தில் வெளியில் வந்துள்ள TTF வாசன், தவறை நினைத்து திருந்தி அமைதியான வாழ்க்கை வாழாமல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி பேட்டி கொடுத்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது, TTF வாசன் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது நினைவிடத்திற்கு சென்றபோது அஞ்சலி செலுத்தி விட்டு TTF வாசன் தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துள்ளார். இதனால், கோபம் அடைந்த தேமுதிக நிர்வாகிகள் போட்டோ எடுக்கிற இடமா இது நீ முதல்ல கிளம்பு… யாரா இருந்தாலும் அடிச்சிடுவேன் பாத்துக்கோ என்று திட்டியுள்ளார். உடனே ஒன்னும் தெரியாது போல் ஷூ வை மாட்டிக் கொண்டு TTF வாசன் வேகமாக கிளம்பியுள்ளார்.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.