பிரபல நடிகரின் மகன் விபத்தில் மரணம்… தீபாவளி இரவில் சோகம்!
Author: Udayachandran RadhaKrishnan1 November 2024, 12:37 pm
சின்னத்திரை நடிகரின் மகன் நேற்று தீபாவளி கொண்டாட்டத்திற்காக கைரில் சென்ற போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகர் கார்த்திக். இவரது மகன் நிதிஷ். கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
நேற்று தீபாவளிக்காக காலை முதல் வீட்டில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிதிஷ், மாலை நேரத்தில் தனது காரில் நண்பர்களுடன் விளையாட்டு திடலுக்கு சென்றுள்ளார்.
பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வேளச்சேரி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்தானது.
இதையும் படியுங்க: போட்றா வெடிய… வசூலில் பிரம்மாண்ட படத்தை முந்திய அமரன்…!!
பின்னர் அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் நிதிஷ் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தடுப்பு சுவரில் மோதிய போது கார் ஓட்டுநரின் பகுதி நொறுங்கியது. காரை ஓட்டியது நிதிஷ் என்பதால் அவருக்கு காயம் அதிகமாக ஏற்பட்டதே இறப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.
சாலையில் போக்குவரத்து இல்லாததால் நிதிஷ் காரை வேகமாக ஓட்டியதே விபத்திற்கு காரணம் என போலீசார் கூறுகின்றனர்.
சின்னத்திரை நடிகர் மகன் விபத்தில் உயிரிழந்தது சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று பிற்பகல் நிதிஷ் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.