‘என் முன்னாடியே வேற ஒரு பொண்ணு கூட இருந்தாரு’.. டி.வி நடிகை திவ்யா புகார் – மறுக்கும் நடிகர் அர்ணவ்..! முழு விவரம் உள்ளே..!

‘பல்லக்கி’ எனும் கன்னட படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் பெங்களூருவைச் சேர்ந்த நடிகை திவ்யா ஸ்ரீதர். கன்னடத்தில் அவர் நடித்த அக்ஷதீபா சீரியலில், தீபா என்னும் கதாப்பாத்திரம் அவருக்கு பெரும் ரசிகர்களை தந்தது.

இதனையடுத்து, முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட ‘கேளடி கண்மணி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதனிடையே, புதுக்கோட்டையைச் சேர்ந்த நைனா முகமத் என்பவர் அர்ணவ் என்ற பெயரில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருந்தார்.

‘கேளடி கண்மணி’ சீரியலை தொடர்ந்து நடிகை திவ்யா மற்றும் அர்ணவ் பிரபலமானார்கள். பின்னர் இருவரும் இணைந்து நடித்து வந்துள்ளனர். மகராசி, செவ்வந்தி சீரியலிலும் திவ்யா நடித்துள்ளார். அர்ணவ் தற்போது செல்லம்மா சீரியலில் நடித்து வருகிறார்.

இருவரும் நட்பாக பழகி வந்தநிலையில், கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது காதலிக்க தொடங்கியதாக தெரிகிறது. ஒரே வீட்டிலும் வாழத் தொடங்கியநிலையில் அந்த வீட்டின் EMI யை திவ்யா கட்டியதாக தெரியவருகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் காதலித்த இவர்கள் 5 ஆண்டுகளுக்கு பின்னர் திருமண வாழ்க்கையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சென்னை வடக்கு மாவட்டம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்தாண்டு ஜூன் மாதம் திவ்யா இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறி, இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் பல்வேறு கேள்வி எழுப்பினர். இதனிடையே நடிகை திவ்யா கர்ப்பமாகவும் இருந்துள்ளார். பலரும் வாழ்த்துக்களையும் கூறி திருமணத்தை முன்பே ஏன் அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த பிரச்சனை முடிவதற்குள் கணவர் அர்ணவ் தன்னை தாக்கியதாக கூறி நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டார். மேலும், கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் இருந்த கணவரையும் வீட்டுச் செலவுகளையும் தானே பார்த்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அர்ணவ் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் தனது மனைவி திவ்யா, அவரது ஆண் நண்பருடன் இணைந்து மூன்று மாத கருவை கலைத்துள்ளதாக நாடகம் நடத்துவதாக கூறியுள்ளார். எனவே இது சம்பந்தமாக மனைவி திவ்யா, அவரது நண்பர் ஈஸ்வர், இதற்கு துணை போன மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் திவ்யாவை தான் தாக்கியதாகக் கூறியிருப்பது முற்றிலும் பொய் என்றும், வீட்டில் தான் இல்லை என்பதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் உள்ளது எனவும், திவ்யா கருவைக் கலைப்பதற்காக நாடகம் ஆடுகிறார் எனவும், தவறான நண்பர்களின் வழிகாட்டுதலால் இவ்வாறு செய்து வருவதாக அர்ணவ் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய திவ்யா அர்ணவ் தன்னிடம் பாசமாகவே இல்லை. தான் அர்ணவ் உடன் வாழ ஆசைப்படுவதாகவும், தான் தன்னோட மதத்தை விட்டு விட்டு அவரோட மதத்திற்கு மாறியுள்ளதாகவும், ஆனால் தன்னை பொருட்படுத்துவதே இல்லை. தனக்கு என்ன வேண்டும் என்று கூட கேட்பதில்லை. ஒரே வீட்டில் தனித்தனியாக இருந்து வருவதாகவும், அவராகவே ஆர்டர் செய்து சாப்பிடுவார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தான் கர்ப்பமான காரணத்தால், எந்த புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிடவில்லை எனவும், படிப்படியாக தன் மீதான பாசம் குறையத் தொடங்கியதாகவும், சீரியலில் நடிக்கும் வேறு பெண்ணுடன் நெருங்கி பழக தொடங்கியதால், தான் திருமணம் நடந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் காலத்திலும் தான் சீரியல் சூட்டிங் சென்றதாகவும், தன்னை அடித்து தள்ளி விட்டதாகவும், வேறு ஒரு பொண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை அசிங்கப்படுத்துகிறார் என்று கண்ணீர் விட்டு கதறினார் திவ்யா.

மேலும் அவர் தன்னை சோசியல் மீடியாவில் இருந்து பிளாக் செய்து விட்டதாகவும், தன் குழந்தை வயிற்றுக்குள் செத்து விடும் என்று அர்ணவ் கூறியதாகவும், கணவருடன் தொடர்பில் இருக்கும் அந்த பெண் தனது முன்னிலையிலே தன் கணவருக்கு முத்தம் தருவதாகவும், ஐ லவ் யூ, ஐ மிஸ் யூ என்று வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவதாகவும், தான் சோசியல் மீடியாவில் போட்டோக்களை போட்டதில் இருந்தே தனக்கு இந்த மாதிரியான கொடுமைகள் ஆரம்பமாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே திவ்யா அளித்த புகார் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. டிவி நடிகர் அர்ணவிடம் காவல் நிலையத்தில் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணை முடிந்து வெளியே வந்த அர்ணவிடம் சில ரசிகைகள் செல்பி எடுத்து கொண்டனர்.

Poorni

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

3 hours ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

3 hours ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

5 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

5 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

5 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

5 hours ago

This website uses cookies.