விஜய் டிவிக்கும் எனக்கும் செட் ஆகல.. மரியாதையே இல்ல, பகீர் கிளப்பிய பிரபல VJ..!

Author: Vignesh
8 March 2024, 8:00 pm

பிரபல தொகுப்பாளினியான விஜே பாவனா விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர், வீடியோ ஜாக்கி, பின்னணி பாடகர் மற்றும் நடனக் கலைஞர் என பல திறமைகளை கொண்டு சிறந்து விளங்கி வருகிறார்.

ஒரு நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தவர் விஜே பாவனா தான். ஆனால், சில வருடங்களாகவே அவர் விஜய் தொலைக்காட்சியில் தலைகாட்டாமல் போயிவிட்டார். இதனிடையே, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பின்னர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியில் ஒளிபரப்பாளராக பணிபுரிகிறார் மற்றும் சேனலுக்காக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இதனிடையே ஏன் விஜய் தொலைக்காட்சியில் பணி செய்யவில்லை என பேட்டி கேட்டதற்கு, எல்லாம் நன்றாக தான் சென்றுக்கொண்டிருந்தது. திடீரென பிரியங்கா என ஒருத்தர் வந்தார். அவரால் என் கெரியரே காலி ஆகிடுச்சு என மறைமுகமாக கூறினார். விஜய் டிவியின் ஸ்டைலே இப்போ வேற…. அவர்கள் இப்போது நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு செல்வதே நோக்கமாக வைத்துள்ளார்கள்.

VJ Bhavana Cover New - updatenews360

அதற்கு பிரியங்கா ஆப்டாக இருந்ததால் அவரையே எல்லா நிகழ்ச்சிகளிலும் போட்டு என்னை போன்ற ஆட்களை வெளியேற்றிவிட்டர்கள். என்னுடைய ஸ்டைலுக்கு அது சரியாக வராது. மேலும், எவ்வளவு தான் விஜய் டிவியில் பெஸ்ட் கொடுத்தாலும் ஆண்கள் தான் அதிகம் பேசப்பட்டு வந்தனர். பெண்களுக்கு அங்கு முக்கியம் தரவில்லை என்பதாலும் சில காரணங்களாலும் அங்கிருந்து விலகியதாக விஜே பாவனா தெரிவித்திருக்கிறார்.


.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 235

    0

    0