சாப்பாட்டிற்கே கஷ்டம்.. நடிகை சாண்ட்ரா எமோஷனல்..!

Author: Vignesh
20 March 2024, 6:30 pm

பொதுவாக சின்னத்திரையில் ரீல் ஜோடியாக இருந்து நிஜ ஜோடியாக மாறியவர்கள் பலர். அதில், குறிப்பாக சேதன் -தேவதர்ஷினி, ஸ்ரீகுமார் -ஷமிதா, சஞ்சீவ் -ப்ரீத்தி, போஸ் வெங்கட் -சோனியா, சஞ்சீவ் -ஆல்யா மானசா, மதன்-ரேஷ்மா, இப்படி பல பிரபலங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இருவருமே சின்ன திரையிலும் வெள்ளி திரையிலும் நடித்துள்ளார்கள்.

sandra-prajin

அந்த லிஸ்டில் பிரஜின் மற்றும் சாண்ட்ராவும் உள்ளார்கள். ஆனால், பெரிய அளவில் இவர்கள் இருவருமே பிரபலமாகவில்லை. பத்து வருடம் கழித்து கர்ப்பமாக இருந்த இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தார்கள். அண்மையில், பிரஜின் மற்றும் சாண்ட்ரா இருவரும் சேர்ந்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார்கள். அதில், அவர் திருமணத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தோம், அதைப்பற்றி யாரிடமும் சொல்ல மாட்டோம்.

sandra-prajin

நாங்கள் காதலிக்கும் போது எங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். அவர்தான் எங்களுக்கு ஒரு மூட்டை அரிசி எடுத்து தந்தார். குழந்தைகள் பிறந்த பிறகு மிகவும் கஷ்டப்பட்டு இருவரும் வளர்த்தோம். எங்களுக்கு யாருமே உதவி செய்யவில்லை. பிரஜின் நான் கஷ்டப்படுகிறேன் என இரவு முழுவதும் தூங்காமல் குழந்தைகளை பார்த்துக் கொள்வார். எங்கள் இரண்டு பேருக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்ததால் நாங்கள் எங்களுடைய கஷ்டமான காலத்தையும் கடந்து வந்தோம் என தெரிவித்துள்ளார்.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!