விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் மாதம் முதல் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அத்தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார் விஜய்.
கொள்கை எதிரியாகவும் அரசியல் எதிரியாகவும் அறிவித்துள்ள கட்சிகளின் செயல்பாடுகளை தீவிரமாக விமர்சித்து வரும் விஜய், சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது போல் பல அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் விஜய்.
இந்த நிலையில் இன்று அம்பேத்கரின் 135 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தவெக தலைவர் விஜய், சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விஜய் அம்பேத்கரை தவெக கட்சியில் கொள்கைத் தலைவராக அறிவித்திருந்தார்.
அந்த வகையில் இன்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த தவெக தலைவர் விஜய், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம் , சகோதரத்துவம் ஆகியவை அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குவோம். நமது சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம்” என்று தெரிவித்துள்ளார்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.