யாரவது அவருக்கு எடுத்து சொல்லுங்க.. CAA-விற்கு எதிராக குரல் கொடுத்த விஜய்.. வெளுத்து வாங்கிய மக்கள்..!

Author: Vignesh
12 March 2024, 11:15 am

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Vijay - Updatenews360

இதனிடையே, சமீபத்தில் தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர செயலி ஒன்றை அறிமுகம் செய்திருந்த நிலையில், 3 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் அந்த கட்சியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் தொடர்ந்து தனது குரலை எழுப்பி வருகிறார்.

vijay

அந்த வகையில், தற்போது சிஏஏ சட்டத்திற்கு எதிராக சட்டத்திற்கு எதிராக தனது குரலை எழுப்பியுள்ளார். சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் சிஏஏ போன்ற சட்டங்கள் ஏற்புடையது அல்ல. தமிழ்நாட்டின் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும் என அறிக்கை ஒன்றை த.வெ.க கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.

இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திமுக ஏற்கனவே தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துவிட்டது. சட்டமன்றத்தில் தமிழகத்தில் சிஏஏ கிடையாது என்ற தீர்மானமும் எடுத்துவிட்டது. ஆனால், விஜய் இப்போது வந்து இதைப்பற்றி பேசுகிறார் யாராவது அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள் என வெளுத்து வாங்கி வருகிறார்கள். இன்னும், சிலர் விஜய் அமைதியாக இருப்பது நல்லது என்று கமெண்ட்களும் செய்து வருகிறார்கள்.

  • Shruti spoke boldly after the leaked video அவர் சொன்னாரு நான் செய்தேன்.. லீக் வீடியோவுக்கு பிறகு போல்டாக பேசிய சிறகடிக்க ஆசை ஸ்ருதி!
  • Close menu