சினிமா வசனத்தை காப்பியடித்து பேசினாரா விஜய்? அதுவும் கிரண் படத்துல சுட்டுட்டாரே!
Author: Udayachandran RadhaKrishnan30 அக்டோபர் 2024, 11:52 காலை
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது முதல் கட்சி மாநாட்டை கடந்த ஞாயிறன்று விழுப்புரம் விக்கிரவாண்டி வி சாலையில் நடத்தினார்.
முதல்முறையாக தனது அரசியல் உரையை பேசினார். பலர் இவரின் பேச்சால் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், சிலர் இவருக்கு எதிராக விமர்சித்து வருகின்றனர்.
முக்கியமாக விஜய் பேசிய வசனங்கள் நடிகை கிரண் நடித்த படத்தில், அவர் பேசுவது போல பேசியுள்ளார். இதுலயும் கூட காப்பியா என கிண்டல் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதாவது, விஜய் பேசிய பேச்சு.. நம்மளோட சில பேர் வரலாம் இல்லையா, அதற்பான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா, அப்படி வந்தால் அவர்களை நாம் அன்போடு அரவணைக்கணும் இல்லையா என பேசியிருந்தார்.
இது எஸ்ஜே சூர்யா, சிம்ரன் நடிப்பில் வெளியான நியூ படத்தில் கிரண் மாடுலேஷனை காப்பியடித்துள்ளதாக ட்ரோல் செய்கின்றனர்.
இதையும் படியுங்க: காவு வாங்கியதா கங்குவா? படம் ரிலீசுக்கு முன்பே மர்ம மரணம்..!!
அந்த காட்சியில், கிரண் இல்லையா, என பேசுவார். அதாவது, அவருக்கு வயாகிடுச்சு இல்லையா, நீங்க சின்ன வயசு இல்லையா, புதுசா குடிவந்திருக்கேன் இல்லையா, மாட்டிண்டு இருக்கேன் இல்லையா என்ற காட்சியை ஒப்பிட்டு கிண்டலடித்து வருகின்றனர்.
ஆனால் விஜய்யை வைத்து எத்தனையோ அரசியல் ட்ரோல்கள் வைரலாகும் நிலையில், இன்னமும் விமர்சனம் செய்வார்கள் என நேற்று தொண்டர்களுக்கு 4 பக்கம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
0
0