விஜய் ஆரம்பிக்கும் புதிய டிவி சேனல்… என்ன பெயர் தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2024, 10:41 am

முழு அரசியல்வாதியாக மாறும் விஜய், தவெக கட்சி செய்திகளையும், உள்ளதை உள்ளபடி காட்ட புதிய டிவி சேனலை ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளார்.

சினிமாவுக்கு முழுக்கு போட்டுள்ள நடிகர் விஜய் கடைசியாக ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள விஜய் தனது முதல் மாநாட்டை நடத்தி இந்தியாவை திரும்ப பார்க்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் முழு அரசியல்வாதியாக மாறி இருக்கும் விஜய், முதல் முறையாக டிவி சேனலை ஆரம்பிக்க உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, கோட்பாடு, அதன் பற்றி செய்திகள் விரைவாகவும், உள்ளதை உள்ளபடி காட்ட வேண்டும் என்ற முனைப்போடு புதிய டிவி சேனலை ஆரம்பிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இதற்காக அவர் புதிய விண்ணப்பத்தை கொடுத்து, அதற்காக காத்திருந்து, அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என எதிர்பார்ப்பதை விட, இருக்கும் பழைய சேனலை வாங்க முடிவெடுத்துள்ளார்.

அதன் படி அவர் வாங்கு சேனலுக்கு வாகை டிவி என பெயர் சூட்ட முடிவு செய்துள்ளார். என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • Redin Kingsley and Sangeetha Announce Pregnantவீட்டுல விஷேசம்… குட்டி கிங்கிஸ்லி Coming Soon : வெளியான வீடியோ!
  • Views: - 255

    0

    0