நயன்தாரா Twins-ல Twist ? மண்டைய பிச்சுக்கும் நெடிசன்ஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2022, 10:19 am

இதெப்படி சாத்தியம் ? இப்போதான் கல்யாணமாச்சு.. அதுக்குள்ள இரண்டு குழந்தைகளா..? இவங்க இந்த 2 குழந்தைகளை தத்து எடுத்து இருக்கிறார்கள், அல்லது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். என்ற இரு வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பரப்பப்பட்டு வருகிறது.

அட செய்தி என்னனு சொல்லாம, தலைய சுத்த வைக்கிறீங்களே ன்னு நெனச்சா, நடிகை நயன்தாரா இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். இதனை கணவர், விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இவர் இப்படி சொன்னதை தொடர்ந்து, பதிவை பார்க்கும் போது, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டிருக்கிறார்கள் என்பது போல தெரிகிறது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளுதல் என்பது.. உயிரியல் முறையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர்தான் சட்டபடி அந்த குழந்தைக்கு தாய் தந்தை. ஆனால், குழந்தை 10 மாதம் இருந்த இடம் மட்டுமே வேறு.

மேலும் எப்போதும் சர்ச்சையாக பேசும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் நடிகை நயன்தாரா நிச்சயமாக குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வார் என்று நயன்தாராவின் திருமணத்திற்கு முன்பே கூறியிருந்தார்.

இதை வெச்சு பார்க்கும்போது, எல்லாம் உண்மைதான் போல…

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி