சினிமா பார்த்த 2 பள்ளி சிறுவர்களுக்கு மரண தண்டனை..! கொடூர அறிவிப்பை வெளியிட்ட அரசு..!

Author: Vignesh
7 December 2022, 1:24 pm

வட கொரியாவில் K-Drama series என்று உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் கொரிய நாடகங்களைப் பார்ப்பது அல்லது விநியோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

வட கொரியாவின் ரியாங்காங் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் சேர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் பல தென் கொரிய மற்றும் அமெரிக்க திரைப்படங்கள், வெப்சீரிஸ்களை பார்த்ததாக கூறப்படுகிறது.

இரு சிறுவர்களுக்கும் அதே நகரத்தில் உள்ள ஒரு விமானநிலையத்தில் உள்ளூர்வாசிகள் முன்னிலையில் அதிகாரிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.

kim korea - updatenews360


இச்சம்பவம் அக்டோபரில் நடந்ததாக கூறப்படும் நிலையில், ஆனால் இந்த கொலைகள் பற்றிய தகவல்கள் கடந்த வாரம்தான் வெளிவந்தன.

16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களும் தடையை மீறி திரைப்படங்களை பார்த்த குற்றத்திற்காக இந்த தண்டனை கொடுக்கப்பட்டதாகவும், இதன் தீவிரத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அனைவரின் முன்னிலையில் தண்டனை கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடகொரியா கடந்தாண்டு, அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை, கிம் ஜாங் இல்லின் நினைவு தினத்தை முன்னிட்டு 11 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்திருந்தது.

அந்த காலகட்டத்தில், குடிமக்கள் சிரிக்கவோ, ஷாப்பிங் செய்யவோ அல்லது மது அருந்தவோ அனுமதிக்கப்படவில்லை.

வட கொரியா நாட்டில் கடந்த 2020இல், பிரபலமாகி வரும் கொரிய நிகழ்ச்சிகளை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசு அதனை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!