போதும் நிறுத்துங்க… தன் மகனை மாதவன் மகனுடன் ஒப்பிட்ட Anchor’ யை வெளுத்து வாங்கிய உதயநிதி!
Author: Shree15 March 2023, 3:27 pm
கடந்த மாதங்களுக்கு முன்னர் உதயநிதியின் மகன் இன்பநிதி தனது காதலியுடன் நெருக்கமாக இருக்கும் ரொமான்டிக் போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைராகியது. இது குறித்து உதயநிதியிடம் சமீபத்திய பேட்டியில் கேட்கப்பட்டது,
அப்போது, என் மகனுக்கு 18 வயது ஆகி விட்டது. அவன் இப்போது அடல்ட் அதனால் நானும் என் மனைவியும் அவனுடைய தனிப்பட்ட விஷயதை பற்றி குறை கூறவோ அதை வெளியில் சொல்லவோ விரும்பவில்லை. அரசியல்வாதி குடும்பத்தில் இருப்பதால் அதுபோன்ற குற்றசாட்டுகள் வரத்தான் செய்யும். அதிலிருந்து எப்படி சமாளிப்பது என அவர் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.
பின்னர் நடிகர் மாதவன் மகன் விளையாட்டு துறையில் நிறைய சாதித்து விருதுகள் வாங்குகிறார். ஆனால், உங்கள் மகன் இப்படி இருப்பதை நினைந்து வருத்தமாக இல்லையா? என்ற கேள்விக்கு, ‘தயவு செய்து இப்படி கம்பேர் செய்யாதீர்கள். அவருக்கு என்ன விருப்பமோ அதை அவர் செய்கிறார்.
இன்பநிதி சென்னைக்கு வந்து எங்களுடன் நேரத்தை செலவழித்தார் 18 வயது பையன் என்ன பண்ண வேண்டுமோ அவர் அப்படி இருக்கிறார். அது பெரிய தப்பும் இல்லை. அதனால் அதில் நான் தலையிட விரும்பவில்லை சந்தோஷமாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.