ஹே பாரு டீ… ஸ்டாலின் பையன் செமயா இருக்கான்… மேடையில் உதயநிதியை வெட்கப்பட வைத்த கீர்த்தி சுரேஷ்!

Author: Shree
6 June 2023, 9:05 am

கற்றது தமிழ், தங்க மீன்கள் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் மாரி செல்வராஜ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த மாரி செல்வராஜ், இரண்டாவதாக தனுஷை வைத்து கர்ணன் என்கிற மாபெரும் ஹிட் படத்தைக் கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்த இப்படம் பல்வேறு விருதுகளையும் வென்று வருவதோடு, பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார் மாரி செல்வராஜ். இப்படத்தை பா.இரஞ்சித்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங்விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நகைச்சுவை நடிகர் வடிவேலு குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற இப்படத்தின் விழாவில் பேசிய கீர்த்தி சுரேஷ், நான் உதயநிதியின் முதல் படத்தை என் தோழிகளுடன் சென்று பார்த்துள்ளேன். அப்போது அவரின் அழகில் மயங்கிய நான் தோழிகளிடம், ஹே பாரு டீ… ஸ்டாலின் பையன் செமயா இருக்கான் என சைட் நடித்துள்ளேன் என கூறி உதயநிதியை வெட்கப்பட வைத்தார். இதை கிருத்திகா உதயநிதியும் கேட்டு சிரிக்க அரங்கமே மகிழ்ந்தது. இதோ அந்த வீடியோ லிங்க்:

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 677

    2

    1