உலகம் முழுவதும் பறக்க மாமன்னனுக்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ்க்கு நன்றி : இன்ப அதிர்ச்சி கொடுத்த உதயநிதி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2023, 3:41 pm

கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மூன்றாவது திரைப்படம் தான் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில், லால், ரவீனா ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மாமன்னன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழகத்தில் சுமார் 700 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சமூக நீதியையும், சமத்துவத்தையும் பேசும் இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மாமன்னன் படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பால், இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், மாரி செல்வராஜ் ஆகியோர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுதவிர இயக்குனர் மாரி செல்வராஜுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றையும் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளாராம் உதயநிதி ஸ்டாலின். அதன்படி மாமன்னன் படத்தை தன் வாழ்வில் மறக்கமுடியாத படமாக அமைத்து கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளாராம் உதயநிதி.

இது குறித்து உதயநிதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதவில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள்.

‘உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிகரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி.

ரெட்ஜெயண்ட்ஸ் நிறுவனம் இயக்குநர் மாரி செல்வராஜ் சாருக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 418

    4

    0