வசூலில் மாஸ் காட்டிய மாமன்னன் – மாரி செல்வராஜுக்கு லக்ஸரி கார் பரிசளித்த உதயநிதி!

Author: Shree
2 July 2023, 1:08 pm

தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த கலை நுணுக்கம் அதிகம் தெரிந்து முறையாக திரைப்படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பிரபல இயக்குனரான ராமிடன் உதவி இயக்குனராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார்.

அவரிடம் திரை நுணுக்கங்களை கற்றுத்தெறிந்து திரைத்துறையில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பிரபல வார இதழ் பத்திரிகையான “மறக்க நினைக்கிறேன்” என்ற தொடரை எழுதியுள்ளார். தமிழில் பெரியேறும் பெருமாள் படத்தை இயக்கி மாபெரும் வெற்றிப்படைத்தார். திருநெல்வேலிக்குப் அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த மாரி செல்வராஜ் கிராமங்கள் சார்ந்த படங்களை இயக்குவதிலேயே ஆர்வமிக்கவராக இருக்கிறார்.

இவர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு தற்போது மாமன்னன் படத்தை இயக்கி அண்மையில் அப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வசூலும் ஓரளவுக்கு ஈட்டியது. இந்நிலையில் இப்படம் தனது சிறப்பான படமான அமைந்ததாக கூறி நடிகர் உதயநிதி மாரி செல்வராஜுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்து வாழ்த்தியுள்ளார். இந்த சொகுசு காரின் விலை ரூ.50 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு சில படங்களே இயக்கியிருந்தாலும் அதுவும் தனது கடைசி படமாக மாமன்னன் இருந்தும் மாரி செல்வராஜை நம்பி நடித்த உதயநிதிக்கு இது பெரிய வெற்றிதான். எனவே இந்த விலையுயர்ந்த பரிசுக்கு மாரி செல்வராஜ் தகுதியானவர் தான் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் குவித்துள்ளனர்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?