உதயநிதியை ஓடி வந்து கட்டிப்பிடித்த நயன்தாரா – Shooting’ல் சும்மா ஜாலி பண்றாங்க – வீடியோ!
Author: Shree31 May 2023, 3:57 pm
லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஒரு நடிகையாக இப்படி இருப்பது இது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார்.
பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார். பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான்.
இரண்டாவது இன்னிங்சிற்கு பிறகு அவரது ரேஞ்சே வேற மாதிரி மாறிடுச்சு. தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்து வருகிறார். இதனிடையே சில காதல் கிசுகிசுக்களில் சிக்கி சர்ச்சைக்குள்ளாகினார். அப்படித்தான் உதயநிதி ஸ்டாலின் உடன் நயன்தாரா நெருக்கமாக பழகி வந்ததாக கிசுகிசுக்கள் வெளியானது.
இருவரும் சேர்ந்து இது கதிர்வேலன் காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா உதயநிதியுடன் சேர்ந்து ரொமான்டிக் நடனமாடிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் உதயநிதியின் நடனத்தை நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துதள்ளியுள்ளனர். இதோ அந்த வீடியோ: