இன்பாவுக்கு அந்த மாதிரி வேலை ஆகணும்னா கால் பண்ணுவான்.. – மகன் குறித்து வெளிப்படையாக பேசிய உதயநிதி..!
Author: Vignesh30 June 2023, 6:00 pm
தமிழ்நாட்டு விளையாட்டு துறையில் அமைச்சராகவும், நடிகராகவும் திகழ்ந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் கழகத் தலைவன் படத்திற்கு பின் மாமன்னன் படம் தான் தன்னுடைய கடைசி படம் என்று தெரிவித்து இருந்தார்.
இன்று மாமன்னன் திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்திற்காக உதயநிதி ஸ்டாலின் பல பேட்டிகளில் கலந்துகொண்டு பல விஷயங்களை பகிர்ந்து வந்துள்ளார்.
அப்படி பேட்டி ஒன்றில் பங்கேற்ற உதயநிதி தன் மகன் அம்மாவிடம் தான் நெருக்கமாக இருப்பான் என்றும், எல்லாவற்றையும் தன் மனைவியுடன் தான் சொல்லுவான் என்றும், தன்னிடம் ஏதாவது ஒரு காரியம் ஆகணும்னா மட்டும்தான் கால் பண்ணுவான் என்றும், அம்மா வேண்டாம் என்று சொன்னா என்னிடம் கூறுவான், இல்லை என்றால் அதைப் பற்றிய சத்தமே இருக்காது என தெரிவித்து இருந்தார்.
மேலும், அதற்கு உன் இஷ்டம் நீ பண்ணு என்று சொல்லிடுவேன். உங்க அம்மா என்ன சொல்றது நான் உன் வயசுல என்னெல்லாம் செஞ்ச தெரியுமா எல்லாத்தையும் அம்மாவை கேட்டா பண்னேன் ஓகேன்னு சொல்லிடுவேன் என்று உதயநிதி பேட்டியில், தெரிவித்து இருந்தார்.
மேலும், சில விஷயங்களில் தான் சம்மதிக்கவில்லை என்றால் அவன் தாத்தாவுக்கு அதாவது தன் தந்தை ஸ்டாலினுக்கு கால் பண்ணி சம்மதம் வாங்கிடுவான் என்று உதயநிதி வெளிப்படையாக கூறியுள்ளார்.