அடங்காத அரசியல்வாதி.. டார்ச்சரால் விரக்தியின் உச்சிக்கே சென்ற ‘பெப்சி’ உமா..!

90ஸ் கிட்ஸ்களுக்கு மிக பிடித்தமான ஒரு தொகுப்பாளர் என்றால் அது பெப்ஸி உமாதான். அவருடைய நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சாதாரணமாக ஒரு போன் காலில் பேசி உங்களுக்கு பிடித்த பாட்டை சொன்னால் அவர்கள் ஒளிப்பரப்புவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர் வட்டம் உண்டு.

இந்த நிகழ்ச்சியை 18 ஆண்டுகள் தொகுத்து வழங்கியவர் உமா. அவர் கடைசியில் சொல்லும் Keep Trying. Keep Trying Better Luck Next Tume என்ற வசனம் இன்னும் பலருக்கு ஞாபகம் இருக்கும்.

அவரின் முகத்தோற்றம், குரல் என அவரை பிடிக்க பல காரணங்களை 90ஸ் கிட்ஸ்கள் கூறுவார்கள். இப்படி கனவுக்கன்னியாக இருந்த உமா சினிமா உலகம் ஏன் விட்டு வைத்தது என யோசிப்பீர்கள்?

ஆனால் சினிமா உலகம் அவரை விட்டு வைக்கவில்லை. அவருக்கு சினிமா வாய்ப்புகள் கொட்டிக்கிடக்க, தனக்கு டிவி வாழ்க்கையே போதும் என சினிமாவை திரும்பி கூட பார்க்கவில்லையாம்.

புகழின் உச்சத்தில் இருந்த பெப்சி உமாவிற்கு பாரதிராஜாவின் தாஜ்மஹால் படத்திலும், கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்திலும், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அருணாச்சலம் படத்திலும், நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால் ரஜினியே போன் செய்து நடிக்க அழைப்பு விடுத்தும். பெப்சி உமா பட வாய்ப்புகளை மறுத்துவிட்டாராம்.

மேலும், பல கோடிஸ்வரர்கள் பெப்சி உமாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட நேரத்தில், ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து பெப்சி உமா விலகிவிட்டாராம். மேலும், ஒரு பிரபல அரசியல்வாதி பெப்சிமாவை அடிக்கடி தொந்தரவு செய்தும் உமா மறுத்துவிட்டதாகவும் அவர் தொடர்ந்து பெப்சி உமாவிற்கு டார்ச்சர் செய்ததாகவும் அப்போதே, தகவல்கள் வெளியானது.

இதனிடையே, தொழிலதிபரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் பெப்சி உமா செட்டிலாகி விட்டார். சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் பெப்சி உமா கலந்து கொண்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு பெப்சி உமா புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானதால், ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

மேலும், அந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தான் இப்போதும் தயார் தான் என்று தெரிவித்துள்ளார். மீண்டும் பெப்சி உமா தொலைக்காட்சிக்கு வருவாரா என 90 கிட்ஸ் ஏக்கத்தோடு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

13 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

13 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

14 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

15 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

15 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

15 hours ago

This website uses cookies.