தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். அதையடுத்து கடைசியாக பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கினார்.
இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியான இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் ரிலீஸ் ஆகியது இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்திருந்தார்.பிரமாண்டமாக உருவாகிய ஜவான் படம் உலக அளவில் நல்ல கலெக்ஷனை அள்ளியுள்ளது.
சுமார் ரூ. 300 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ. 1146 கோடிக்கு வசூல் ஈட்டியுள்ளது. இது அட்லீயின் கெரியரில் மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. அட்லீ தொடர்ந்து படத்தின் காட்சிகளை காப்பியடிக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தாலும் அவரை யாராலும் வீழ்த்தவே முடியவில்லை.
சர்ச்சைகளுக்கு மத்தியில் தனது மேக்கிங் ஸ்டைலையும் வித்தியாசத்தையும் படத்திற்கு படத்திற்கு நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். இதுவரை அட்லீ தனது கெரியரில் ஒரு தோல்வி படத்தை கூட கொடுக்கவில்லை என்பது மிகப்பெரிய ஆச்சர்யமாக பார்க்கப்பட்டு வருகிறது. அவ்ளளவு ஏன் அறிமுக இயக்குனராக பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தபோதும் அவரை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியவில்லை. அவரது உயரம் உச்சத்தை தொட்டுவிட்டது. இனி யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.
இந்நிலையில் இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஷாருக்கான். அவரது பிறந்தநாள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு ஜவான் படம் OTT தலத்தில் இன்று ரிலீஸ் செய்துள்ளனர். இதனால் இன்னும் சில நாட்களுக்கு ஜவான் படத்திற்கு நல்ல மவுஸ் கிடைக்கும். இதன் மூலம் அட்லீயும் குதூகலத்தில் இருப்பார் என பேசப்பட்டு வருகிறது.
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
This website uses cookies.