TR தாடியோட இருக்க இதுதான் காரணமாம்.. பலரும் அறிந்திடாத விஷயம்..!
Author: Vignesh10 May 2024, 7:08 pm
தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என பல்வேறு துறைகளிலும் கலக்கியவர் டி ராஜேந்தர். இன்று அவர் அவரது 69 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். முன்னதாக, ஒரு தலை ராகம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் வெறும் இயக்கம் மட்டும் இல்லாமல், வசனம் எழுதுவது, கேமரா, இசையமைப்பு என எல்லா ஜோனர்களிலும் கலக்கி இருந்தார்.
மேலும் படிக்க: செல்வராகவன் கெட்ட வார்த்தையில் திட்டுனாரு.. மனசு கேட்கல.. படத்தை விட்டு வெளியேறிய சீனியர் நடிகர்..!
இவரது மகன் சிம்பு சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் காட்டி வந்தவர். சினிமாவில், பல துறைகளில் இவரும் சாதித்துள்ளார். இந்நிலையில், டி ராஜேந்தர் என்று நாம் நினைக்கும் போது முதலில் நினைவுக்கு வருவது அவரது தாடி தான். இந்த தாடிக்கு பின்னால், ஒரு கதையே உள்ளதாம். அதாவது, கல்லூரியில் சேரும் போது தனது தாடியை சேவ் செய்து கொள்ள முடிவெடுத்தாராம். ஆனால், அவரது உறவினர் ஒருவர் இவன் மூஞ்சிக்கு எல்லாம் ஷேவிங் ஒரு கேடா சும்மா இருந்தா காசும் பிளேடும் மிச்சம் என்று கூறிவிட்டாராம்.
மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!
இதனால் பாதிக்கப்பட்ட ராஜேந்தர் வாழ்க்கையில் வென்ற பிறகு இனி தாடியை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தாராம். பிறகு சினிமாவில் சாதித்த பிறகு வெற்றி கண்ட போது தாடியை ஏன் எடுக்க வேண்டும் என்று அப்படியே அதை கண்டினியூ செய்து விட்டாராம்.