1990 களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்த தேவயானி எல்லா ஹீரோக்களுக்கும் பொருந்தும் பொருத்தமான அழகான, பவ்யமான நடிகையாக ரசிகர்களை கவர்ந்தார். அன்றும் இன்றும் என்றும் அழகிய நடிகையாக நம் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் தேவயானி குழந்தை போன்ற குணம் கொண்டு கியூட்டான குரலில் பேசுவது அவருக்கே தனி அழகு.
தமிழ், தெலுங்கு மற்றும் மளையாளம் மொழிப் படங்களில் நடித்துள்ள தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்தார். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், பெற்றோர்களை எதிர்த்து நண்பர்கள் முன்னிலையில் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தேவயானி குறித்து ஒரு சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. அதில் தேவயானி சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சிவசக்தி என்கிற படத்தில் இடம் பெற்றுள்ள கவர்ச்சி பாடலுக்கு நடனமாட வாய்ப்பு கிடைத்ததாகவும், வாய்ப்புகாக ஏங்கி கொண்டு இருந்த தேவயாணி இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம் என நினைத்த இதற்கு ஓகே சொல்லிட்டதாக சினிமா பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தேவயானிக்கு பல கவர்ச்சி பாடல்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் இவர் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டு குடும்ப பாங்கான ஹோம்லி கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…
‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…
இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப்…
பெருசு டைட்டில் படத்திற்கு சரியான தலைப்பு இயக்குனர் வைத்துள்ளார் என திருச்சியில் நடிகர் பாலசரவணன் கூறியுள்ளார். ஸ்டோன் பீச் பிலிம்ஸ்,…
தங்கக் கடத்தல் பின்னணியில் உள்ள சதி நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.