அதை கூட விட்டு வைக்கலையா?.. அதுல்யா வீட்டில் நடந்த திருட்டு.. கைதான குற்றவாளிகள்..!

Author: Vignesh
5 July 2024, 10:00 am

அதுல்யா ரவி தமிழ் திரைப்பட நடிகை ஆவர் . முதல் முதலில் நடிகை அதுல்யா ரவி தமிழில் நடிக்க ஒப்பந்தம் ஆன திரைப்படம் “நாகேஷ் திரையரங்கம்”. ஆனால் திரைப்படம் வெளியாவதற்கு தாமதம் ஆக ” காதல் கண் கட்டுதே ” என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்க பட்ட படம் . வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் இளைஞர்கள் ,மற்றும் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது.

Athulya Ravi -updatenews360

2018-ல் துரை இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி ,பாலா சரவணன் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘ஏமாலி’ அந்த படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்திருப்பார் . அதன்பின் 2019ஆம் ஆண்டு நடிகர் விக்ராந்த்க்கு ஜோடியாக “சுட்டு பிடிக்க உத்தரவு ” என்ற அதிரடித் திரைப்படத்தில் புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்ட அதுல்யா கதாநாயகியாக மட்டுமில்லாமல் ” நாடோடிகள் 2″, “அடுத்த சாட்டை ” , முருங்கைக்காய் சிப்ஸ் என சில படங்களில் கதாபாத்திர வேதங்கள் கூட நடித்திருந்தார்.

Athulya Ravi -updatenews360

படவாய்ப்புகள் வர வர கவர்ச்சியில் கவனம் செலுத்த துடைங்கிய அதுல்யா ரவி . முதல் படத்தில் பவ்யமாக நடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியை ஏற்றிக்கொண்டு போன அதுல்யா ரவி தற்போதுவரை கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். முழு நேர கவர்ச்சியில் இறங்கிய அதுல்யா ரவி அதிகமாக கவர்ச்சி புகைப்படங்களையே தனது சோசியல் மீடியாக்களில் பகிர்வார்.

Athulya Ravi -updatenews360

இந்நிலையில், அதுல்யா ரவி தனது சொந்த ஊரான கோவையில் தனது அம்மாவுடன் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் அவரது வீட்டில் 2000 ரூபாய் உள்ளது. இதனால், வடவள்ளி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். விசாரணையில், வீட்டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூரை சேர்ந்த செல்வி மற்றும் அவரது தோழியான சுபாஷினி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் பாஸ்போர்ட் எங்கு வைத்துள்ளார்கள் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தற்போது, இந்த விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 166

    0

    0