படப்பிடிப்பில் ரஜினியை பார்த்து பைத்தியம் கூறிய நபரால் பரபரப்பு : சட்டையை பிடித்து பளார் விட்ட பிரபல நடிகை!!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2022, 5:25 pm

1980 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, பாலாஜி, மனோரமா ஆகியோரின் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்த திரைப்படம் “பில்லா”.

இத்திரைப்படம் ஹிந்தியில் அமிதாப் பச்சான் நடித்த “டான்” திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும். ரஜினி நடித்த “பில்லா” திரைப்படத்தை ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்தார்.

சுரேஷ் பாலாஜி இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மனோரமாவை பாராட்டும் விதமாக எடுக்கப்பட்ட ஒரு விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், “பில்லா” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டார்.

பில்லா” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது அங்கே படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்த ஒரு நபர், ரஜினியை குறிப்பிட்டு “பரவாயில்லையே, பைத்தியம் நல்லா டான்ஸ் ஆடுதே” என கேலி செய்திருக்கிறார்

ரஜினிகாந்த் அந்த காலகட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூட்டத்தில் ஒருந்து இவ்வாறு ஒரு நபர் கூறியவுடன், அங்கிருந்த மனோரமா, அந்த நபரை அழைத்து அவரது சட்டையை பிடித்து அடித்தாராம். “யாரடா பைத்தியம்ன்னு சொன்ன, அந்த தம்பி எவ்வளவு கஷ்டப்பட்டு ஆடிட்டு இருக்காரு” என கண்டபடி திட்டினாராம்.

மேலும் அந்த நபரை “இந்த இடத்தை விட்டு வெளியில் அனுப்பினால்தான் இங்கே ஷுட்டிங் நடக்கும்” என கூறினாராம் மனோரமா. அந்த நபரை படக்குழுவினர் வெளியே துரத்தி அனுப்பிவிட்டனர். அந்த நபர் போன பிறகுதான் நடிக்கவே தொடங்கினாராம் மனோரமா.

இந்த சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட ரஜினிகாந்த், “ஒருவாட்டி அரவணைச்ச கை, நீங்க ஆயிரம்வாட்டி அடிச்சா கூட ஏத்துப்பேன்” என மிகவும் உணர்ச்சிப்பொங்க பேசினார். மேடையில் அமர்ந்துகொண்டிருந்த மனோரமா ரஜினியின் பேச்சை கேட்டு பூரித்துப்போனார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 802

    14

    6