அதுக்குள்ளவா? 8 மாதத்தில் இரண்டாவது குழந்தைக்கு ரெடியான பிரபலம் – நட்சத்திர குடும்பத்தில் குதூகலம்!

Author: Rajesh
22 February 2024, 6:37 pm

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவின் மகனான ராம் சரண் 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே நல்ல அறிமுகமாக அமைந்து 50 நாட்களை கடந்து ஓடியது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் நந்தி சிறப்பு நடுவர் விருதுகளை ராம் சரண் வென்றார்.

அதன் பிறகு மாவீரன் திரைப்படம் கைகொடுத்தது. கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். இவர் 2011 ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தனர். வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்த பின் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்த அந்த தம்பதிகள் ஆர்ஆர்ஆர் வெற்றிக்கு பிறகு மனைவி உபாசனா காமினேனி கர்ப்பமாக இருப்பதாக ராம் சரண் குடும்பம் அறிவித்தது. அதையடுத்து அவருக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு விழா நடைபெற்றது.

கடந்த ஜூன் 20 அன்று ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பெண்குழந்தை பெற்றெடுத்தார். இதையடுத்து ஒட்டுமொத்த குடும்பமும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. பின்னர் ராம் சரண் மகளுக்கு பெயர் சூட்டுவிழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக முகேஷ் சிம்பனி தனது மனைவி நீடா அம்பானியுடன் கலந்துக்கொண்டு ராம் சரண் மகளுக்கு தங்க தொட்டில் பரிசாக கொடுத்தார்கள். 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட தொட்டில் விலை மட்டும் ரூ.1 கோடி என்று செய்தி வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் ராம் சரணின் மனைவி உபாசனா கொனிடேலா சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் இரண்டாவது குழந்தை பெற்றெடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒரு குழந்தையைப் பெற ஒரு முடிவு செய்தேன். அதற்காக நான் வருத்தப்படவில்லை. அது என் விருப்பம் சார்ந்தது.

என் மருத்துவர் எப்போது என்னைப் பரிசோதிக்க வந்தாலும் நான் இரண்டாவது குழந்தைப் பெற்று எடுக்கத் தயாராக இருப்பதாக சொல்லுவார்கள். நானும் இரண்டாவது குழந்தைப் பெற்று எடுக்கத் தயார் ஆகி வருகிறேன். இது என் உடல்நிலை, என் விருப்பம் சார்ந்தது” என்று கூறினார் உபாசனா. திருமணம் ஆகி சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு தான் பெண் குழந்தை பெற்றெடுத்தார். அதற்குள் இரண்டாவது குழந்தைக்கு தயாராகி இருப்பதை சிரஞ்சீவி குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். .

  • Vijay Thalapathy 69 movie updates நடிகர் விஜய்க்கே இப்படி ஒரு நிலைமையா…தளபதி 69-க்கு ஏற்பட்ட பெரும் சிக்கல்…!
  • Views: - 328

    0

    0